அரசாங்க பொது ஊழியர் சங்கம் மேதின விழாவை கல்முனையில் நடத்த ஏற்பாடு.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தனது 17ஆவது மே தின விழாவை கல்முனையில் நடத்தவிருக்கின்றது. இவ்விழாவானது பொது ஊழியர் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில், கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
மே மாதம் முதலாம் திகதி இடம்பெறவிருக்கும் இந்த மே தின விழா அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கிளை நிறுவனங்களான அகில இலங்கை பொது ஊழியர் முன்னணி வடக்கு கிழக்கு மாகாண ஜூவோதய நலன்புரி நிறுவனம் என்பவற்றையும் இணைத்ததாக நடைபெறுமென சங்க செயலாளர் எம்.எம்.ஏ.வகாப் தெரிவித்தார். குறித்த மேதின பொதுக் கூட்டத்தில் பல முக்கியஸ்தர்கள் அதிதிகளாக கலந்து கொள்ளவிருப்பதுடன் நாட்டின் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் தொழிலாளர் வர்க்க பிரச்சினைகள் குறிப்பாக அரச ஊழியர் பிரச்சினைகள் உட்பட வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த மேதின பொதுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அத்துடன் வழமை போன்ற இம்முறையையும் மேதின விழாவில் சமூகத்திற்கு பெரும் பங்காற்றி வரும் பெருந்தகைகளை கௌரவிக்கும் சான்றோர் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த மே தின விழாவுடன் இணைந்ததாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தலைவர் லோகநாதன் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினர் மேதின ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment