தாயின் கள்ளக்காதலனைக் குத்திக் கொன்ற தனயன்! பூனகரி
தாயின் கள்ளக்காதலனைக் கத்தியால் தனயனே குத்திக் கொன்ற சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, பதினேழு வயதுடைய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். மகனுடன் தனிமையில் வசித்து வந்த நடுத்தர வயதுடைய தாயாருக்கும் அடுத்த வீட்டில் மனைவியின்றி மகளுடன் வசித்து வந்த தந்தைக்கும் இடையில் ஏற்பட்டிருந்த உறவே இந்த அனர்த்தத்தில் போய் முடிந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தனது தாயாரும் அவரது கள்ளக்காதலனும் தனிமையில் அடுத்த வீட்டில் இருந்த வேளை, அங்கு சென்ற மகன் காதலன் மீது சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது அவரது தாயாரும் காயத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடலின் பின்பகத்திலும் முதுகிலும் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதனால், பொன்னம்பலம் விஜயரத்தினம் என்ற அடுத்த வீட்டுக்காரர் உயிரிழந்துள்ளார். அவரைக் குத்திக் கொன்ற இளைஞனை கிளிநொச்சி நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு பூனகரி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை 19 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment