Sunday, April 10, 2011

தடுத்து வைத்துள்ள புலிகள் சார்பில் கிழக்கு மாகாண சபையில் ஜேவிபி பிரேரணை.

கடந்த காலங்களில் புலிகளுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இலங்கை ஆரசினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரினதும் பெயர் விபரங்களை வெளியிடுமாறு கிழக்கு மாகானசபை கூட்டத்தொடரில் ஜேவிபி கோரிக்கை விடுத்துள்ளது. ஜே.வி.பி கட்சியின் மாகான சபை உறுப்பினரான விமல் பியதிஸ்ஸ வினால் மாகாணசபை அமர்வின்போது கொண்டுவரப்பட்ட விசேட பிரேரணையில் மேற்கண்டவாறு வேண்டப்பட்டதுடன், இலங்கை மத்திய அரசு பொருளாதாரா இஸ்திர தன்மையை கடைபிடிக்க தவறிவிட்டது, தேசிய ஒற்றுமை உட்பட ஜனநாயகத்தை இலங்கை அரசு யுத்தம் முடிந்த 2 வருடத்திற்குள் நிலைநிறுத்த தவறிவிட்டது எனும் தீர்மானங்களும் மாகானசபையில் நிறைவேற்றபட்டுள்ளது. .

அத்துடன் கீழ்வரும் விடயங்களை கவனத்தில் எடுத்துள்ள கிழக்கு மாகானசபை அவற்றை மத்திய அரசு அமுல்படுத்தவேண்டும் என கோருவதென முடிவெடுத்துள்ளது.

சுதந்திரமான முறையில் ஜனநாயகத்தை பிரதிபலிக்கவும் உறுதிபடுத்தவும் உருவாக்கபட்ட அமைப்புகளை செயற்பட அனுமதித்தல் வேண்டும்.

புலிகளின் கைது செய்யபட்டு கடத்தபட்டு மறைவிடயங்களில் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளிடுதல் வேண்டும்.

மூடிவைத்திருக்கும் அனைத்து வீதிகளும் உடனடியாக திறக்கபடல் வேண்டும் போன்ற தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளது.

இந்த தீர்மானங்கள் நிறைவேற்றபட்டபோது ஆழும்தரப்பும் எதிர் தரப்பும் எந்தவித எதிர்பும் இல்லாமல் ஆதரவளித்தனர்.

07பேரில் 6 பேர் ஆதரவாக வாக்களித்தனர். 01வர் வாக்களிக்க தவறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com