லிபியாவில் சண்டை நிறுத்தம் கடாபி ஒப்புதல்
லிபியாவில் அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அதிபர் கடாபி ஒப்புக் கொண்டுள்ளதாக ஆப்ரிக்க யூனியன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். லிபியாவில் அதிபர் கடாபியை நீக்க, எதிர்ப்பாளர்கள் கடந்த சில மாதங்களாக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்ப்பாளர்களுக்கு நேட்டோ படைகள் ஆதரவாக செயல்பட்டு கடாபி படைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தின.
இந்த போரால் அப்பாவி லிபியர்கள் பலியாவதை தடுக்க உடனடி போர் நிறுத்தம்தான் ஒரே வழி என ஆப்ரிக்க யூனியனை சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர். தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தலைமையில் மாலி, மவுரிடானியா உட்பட ஆப்ரிக்க தலைவர்கள் கடாபியை திரிபோலியில் சந்தித்து பேசினர். அப்போது கிளர்ச்சியாளர்களுடன் சண்டை நிறுத்தம் செய்ய கடாபி ஒப்புக் கொண்டதாக பின்னர் ஆப்ரிக்க யூனியன் தலைவர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment