முல்லைத்தீவு , வவுனியா மாவட்டங்களில் த.தே.கூ முன்னணியில்.
வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை தமிழரசு கட்சி முல்லைத்தீவு கிழக்கு மாந்தை பிரதேச சபைக்காக 1223 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 920 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 3 வாக்குகள் மாத்திரமே பதிவாகியுள்ளன. சிறிறங்காவின் பிரைஜைகள் முன்னணி 56 வாக்குகளைப் பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபைக்காக இலங்கை தமிழரசு கட்சி 11878 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5488 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி 1420 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. இங்கு ஜேவிபி 50 வாக்குகளைப் பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment