Friday, March 18, 2011

அமெரிக்காவில் போலி சாமியாருக்கு தண்டனை!

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள் என்பது தொடர்ந்து நிருபிக்கப் பட்டு வருகிறது. ஆன்மீகத்தின் பெயரால் மக்களின் பொருளாதரத்தையும், பெண்களின் கற்பையும் சூறையாடும் போலி மதகுருமார்கள் பற்றிய செய்திகள் தினமும் வந்தாலும் வெளிச்சத்திற்கு மயங்கும் விட்டில் பூச்சிகளாக இவர்களை நாடி செல்லும் கூட்டத்திற்கோ பஞ்சமில்லை. அதனால் இந்த போலி சாமியார்கள் தங்களில் சித்து வேலையை காட்டுவதோடு, சில வேளை கைது செய்யப்பட்டாலும் ஜாமீனில் வெளிவந்து தங்களின் தூய ஆன்மீக[!] பணியை மீண்டும் தொடங்கி விடுகிறர்கள். இந்த போலிகளின் விஷயங்கள் இந்தியாவில் மட்டுமன்றி அமெரிக்காவிலும் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில் 200 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் நடத்தி வருபவர் 82 வயதான பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி. இவர் தனது ஆசிரமத்தில் 12 வயது சிறுமிகளாக இருந்த காலம் தொடங்கி தங்கி வளர்ந்து வந்த இரு பெண்களை, அப்பெண்கள் “டீன்ஏஜ்” பருவத்தில் இருந்தபோது, அதாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாமியார் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி இவர்களுடன் “செக்ஸ்” உறவில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் செய்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்பெண்களின் இப்போதைய வயது 30 மற்றும் 27 ஆகும். இதை தொடர்ந்து சாமியார் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ரூ.5 கோடி ரொக்க ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை ஹீல்டன் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சார்லஸ் ராம்சே குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி சுவாமிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ரூ.90 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதற்கிடையில் இந்த சாமியார் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இடம் மாறினாலும் சிலருக்கு இயற்கை குணம் மாறாது என்பதற்கு இந்த் போலிச்சாமியார் சிறந்த உதாரணமாக உள்ளார். மக்கள் விழித்துக் கொண்டால் சரி!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com