Wednesday, March 9, 2011

கேபி மீது நடவடிக்கை எடுக்கப்படுமாம் என்கிறார் அமைச்சர் பிரியதர்சன யாப்பா.

இந்தியாவிடம் பாரமளிக்காமைக்கான காரணம் என்ன? ரணில் கேள்வி புலிகளியக்கத்திற்கான நாசகார ஆயுதக் கொள்வனவு பொறுப்பாளரும், அவ்வியக்கத்திற்கான சர்வதேச வலையமைப்பை நிர்வகித்தும் வந்தவரும், தற்போது இலங்கை அரசின் செல்லப்பிள்ளையாகவுமுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் என்பவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அனுர பிரிய தர்சன யாப்பா ஊடகவியளாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அரசாங்கத்திற்கும், கே.பீ க்கும் இடையிலான தொழிற்பாடுகள் குறித்து எதுவும் கூறுவதற்கு இல்லை எனவும் கே.பி எனப்படுபவர் அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள அல்லது தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதி ஆவார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்விடுதலை புலிகள் தென்னிந்தியா உட்பட சர்வதேச ரீதியில் வளர்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் தலைவர்களை கொலை செய்யவும் இலங்கையில் தாக்குதல் நடத்தவும் தமிழகத்தில் முன்று முகாம்களை அமைத்து விடுதலை புலிகள் பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் இதனை புலனாய்வு தகவல்கள் உறுதிசெய்வதாகவும் கூறியுள்ள பிரதமர் ஜயரத்ன இப் பயிற்சிகளை பொட்டு அம்மானின் உதவியாளராக இருந்த புகளேந்திரன் என்பவர் நடாத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இன்று இடம்பெற்ற அவசரகாலச்சட்டம் நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்கட்சித்தலைவர் பாரத பிரதமர் ரஜீவ்காந்தியின் கொலைவழக்கில் தேடப்படும் குற்றாவாழியான கே.பி ஐ இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசு தயாராக இருக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்பிய அவர் கே.பி யை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்த இது மிகவும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் எனவும், எவ்வாறாயினும் கே.பி யை இந்தியாவிடம் ஒப்படைப்பதாயின் அது தொடர்பான சட்டரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் புலிகள் ஒன்று திரள்வதான பிரதமரின் கூற்று மீது கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், இவ்விடம் தொடர்பாக இலங்கை அரசு இந்தியா விற்கு தெரியப்படுத்தியள்ளதா எனவும், இவ்விடயத்தில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாது எனவும் கேள்வி எழுப்பினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com