56 வாக்குகளுக்காக முன்னாள் எம்பி கனகரட்ணத்தை சிறையில் அடைத்த சிறிறங்கா.
நடந்து முடிந்த தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட சிறிறங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணி 56 வாக்குகளை பெற்றுள்ளது. இந்த 56 வாக்குளையும் பெற்றுக்கொள்வதற்காக லட்சக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு பாரிய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிறங்கா தேர்தல் பிரச்சாரம் மிகச்சூடுபிடித்திருந்த தருணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக முல்லைத்தீவுப் பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரங்களை தலைமை தாங்கி நடாத்தி வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தை இரு நாட்கள் சிறையில் அடைத்தாகவும் தெரியவருகின்றது.
இந்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கனகரட்ணம் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக முல்லைத்தீவுப் பிரதேசத்தில் செய்ற்பட்டு வருகின்றார். இவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிந்தபோது , சிறிறங்காவின் ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்குமிடையே கைக லப்புக்களும் இடம்பெற்றுள்ளது. இக்கைலப்புக்களை தொடர்ந்து பொலிஸில் முறையிட்ட சிறிறங்கா தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தை சிறையில் அடைத்துள்ளார்.
கனகரட்ணம் தற்போது அரசின் பக்கம் சாய்ந்திருந்தாலும் அவர்கள் முன்னர் புலிகளை ஆதரித்தவர்கள் என வசைபாடும் சிறிறங்கா தான் ஒருவர் மாத்திரமே புலிகளை நேர் எதிரே நின்று எதிர்த்தவர் என தற்போது புதுக்கதை ஒன்று கூறிவருவதாகவும் அறியமுடிகின்றது
0 comments :
Post a Comment