Saturday, March 12, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 55, 56வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 55வது நாளான (11-03-2011, வெள்ளி) நேற்று “ஜான்சி” மாநகரத்திலிருந்து 20வது கிலோ மீற்றர் தூரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் “குவாலியர்” மாநகரம் நோக்கி நடைபயணம் தொடர்ந்தது.

நடைபயண வீரர்கள் 55வது நாளான நேற்று 47 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர்.

இந்நிலையில் நடைபயண வீரர்களை உற்சாகப்படுத்த சென்னையிலிருந்து ஈழ தேசிய மாணவர் அமைப்பைச் சேர்ந்த 10 மாணவர்கள் குவாலியர் நோக்கி இரவு பயணமாகினர். அவர்கள் 13-03-2011 அன்று காலை 01:00 மணியளவில் நடைபயண வீரர்களுடன் இணைந்துகொள்வார்கள்.

56வது நாளான (12-03-2011, சனி) இன்று நடைபயண வீரர்கள் காலை 05:30 மணியளவில் புறப்பட்டு, குவாலியர் மாநகரத்தை நோக்கி வேகமாக நடந்தனர்.

மாலை 04:00 மணியளவில் நடைபயண வீரர்கள் “குவாலியர்” மாநகரத்தை அடைந்தனர். குவாலியர் மாநகரை பொதுமக்கள் நெருக்கடியான நேரத்தில் நடைபயண வீரர்கள் கடந்தனர். அதனால் பொதுமக்கள் நல்ல வரவேற்பைக் கொடுததனர். நடைபயணம் வெற்றி பெற்று ஈழப்பிரச்சினைத் தீர கைகுழுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மாலை 04:30 மணியளவில் மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் நடைபயண வீரர்களுடன் சந்திப்பை நடத்தினர். நிச்சயமாக ஈழப் பிரச்சினைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்று தெரிவித்து விடைபெற்றனர்.

நடைபயண வீரர்கள் 56வது நாளான இன்று 39 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர். “குவாலியர்” நகரைக் கடந்து 20வது கிலோமீற்றரில் இரவு முகாம் அமைத்தனர். நடைபயண வீரர்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் 278 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே.

இதற்கிடையில் இன்று ஈழ தேசிய மாணவர் அமைப்பைச் சேர்ந்த மேலும் 35 மாணவர்களும் மற்றும் நடைபயண வீரர்களின் குடும்பத்தினருமாக 50 பேர் நடைபயண வீரர்களை ஊக்குவிக்க பயணமானார்கள். இவர்கள் “ஆக்ரா” வில் நடைபயண வீரர்களுடன் இணைந்துகொள்வார்கள்.

மேலும் டெல்லியில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் அனைவரும் நடைபயண வீரர்களை வரவேற்க காத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்கள்.

நன்றி!
இவ்வண்ணம்,
ஞா.ஞானராஜா
நடைபயண தலைமைக் குழு
12-03-2011
video- www.liberationmarch.com

1 comments :

Anonymous ,  March 15, 2011 at 11:47 AM  

This is also a way of making money. They made money in various methods. This is also another method. They made enough money and now they are facing problems and difficulties in sharing it. But still they are trying to make money.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com