ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் மீண்டும் புலிகள்:
ஐரோப்பிய ஒன்றித்தினால் பயங்கரவாதிகள் என தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தை மீண்டும் அவ்வொன்றியம் தமது தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளின் 2011ம் ஆண்டு ஜனவரி 31இன் 83-2011 ஆம் இலக்க சட்டத்தின் படி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத பட்டியலில் 26 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமது உறுப்பு நாடுகளில் இவ் தீவிரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் முடக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முற்றுமுழுதாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக கருதிய ஐரோப்பிய ஒன்றியம் தமது நாட்டின் பிரஜைகளுக்கு இலங்கை செல்லவதற்கு விடுத்திருந்த எச்சரிக்கையை தளர்த்தியுள்ளது. இந்நிலை யில் இலங்கையில் இல்லாத பயங்கர வாதத்திற்கு தமது நாடுகளில் அவ்வொன்றியம் தடைவிதிப்பதற்கான நோக்கம் எந்தவொரு காலகட்டத்திலும் புலிகள் மீண்டுடௌ சந்தர்ப்ப ம் வழங்க கூடாது என்பதும் புலம் பெயர் புலிப்பினாமிகளின் நடவடிக்கைகளை முடக்குவதுமே நோக்கம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment