Friday, January 14, 2011

சிங்கத்தின் குகையினுள் இருந்து குரைக்கின்றேன்.

மனோ கணேசன் தலைமையிலான மக்கள் ஜனநயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் மனோகணேசனின் சகோதரருமான பிரபாகணேசன் ஐக்கிய தேசிய முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்று நுழைந்தபின்னர் ஆழும் கட்சியின் பக்கம் தாவியிருந்தார். இவர் அததெரணவின் சந்திப்பு நிகழ்சியில் கலந்து கொண்டு வழங்கிய நேர்காணலில், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஜனநாயக மக்கள் முன்னணியின் ஒலித்தது. ஆனால் நிலைமை தற்போது வேறாகவுள்ளது என கேட்டகப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் குரல் சிங்கத்தின் குகைக்கு பத்து அடி தூரத்தில் நின்று குரைப்பதை விட, தான் சிங்கத்தின் குகைக்குள்ளேயே இருந்து குரைப்பதாக தெரிவித்துள்ளார்.


அத்துடன் இந்த ஜனவரி மாதம் நிறைவடைவதற்குள் தனக்கு அரசாங்கத்தில் மக்களுக்கு சேவை செய்யக் கூடிய அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்கும் எனவும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தை வெள்ளையடிப்பதற்கோ, அரசாங்கத்தை தூக்கி நிறுத்துவதற்கோ தான் அரசுடன் இணைந்துக் கொள்ளவில்லை எனவும் மாறாக தமது மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து என்ன செய்து கொடுக்க முடியுமோ அதற்காகத்தான் தான் அரசாங்கத்திற்கு சென்றதாக கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் வடகிழக்கு மக்கள் கடந்த 30 வருடங்களாக பல துயரங்களை சுமந்தார்கள் என்பது உண்மை. ஆனால் கடந்த 150 வருடங்களாக மலைகத்திலுள்ள இந்தியா வம்சாவழி மக்கள் 10 அடி நீழ 10 அகல அறை களில் அவலவாழ்கையை தொடர்கின்றனர். அவர்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளையே நான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். குற்றச்செயல்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியோரின் செயலாக இருக்கலாம் எனவும் அவர் ஊகம் வெளியிட்டுள்ளார்.

ஏதிர்வரும் காலங்களில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கும் வகையில் தான் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடப் போவதில்லை என்பதை உறுதிபட பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

2 comments :

Anonymous ,  January 15, 2011 at 2:59 PM  

இப்ப என்ன? தான் நாய் என்கிறாரா?

Anonymous ,  January 18, 2011 at 4:56 PM  

In cinema the actors play their role for certain hours but in politics,
they play their role for years and years.We audience are compel to watch the plays

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com