சவூதி அரேபியா தேடி வரும் 47 அல் கொய்தா தீவிரவாதிகள்
அல் கொய்தா தீவிரவாதிகள் காலுன்றியுள்ள நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. சவூதி அரேபியா தீவிரவாதிகளுக்கெதிராக நடத்திவரும் வேட்டைக்கு தாக்குப்பிடிக்க முடியாத அல் கொய்தா தீவிரவாதிகள் அண்டை நாடுகளான ஏமன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து கொண்டு சவூதி அரேபியாவில் தீவிரவாதத்தை வேரூன்ற செய்யும் முயற்சியை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் முக்கிய தீவிரவாதிகள் 47 பேரை அடையாளங்கண்டு உலகில் எங்கிருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த சவூதி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சர்வதேச போலீசான இன்டர்போலின் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளது. தேடப்படும் தீவிரவாதிகளில் பின்லேடனின் மருமகனும் ஒருவர். இவர் அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக நம்பப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment