Saturday, January 22, 2011

சுவிஸில் 17 வயது தமிழ்ச் சிறுமி கடத்தல் : 25700 பிராங் கப்பம் கோரப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில், லிமார்ட் பிளாட்ஸ்: (Limart Platz) எனுமிடத்தில் கடந்த 14 ம் திகதி காலை 7.14 மணிக்கு பாடசாலை சென்று கொண்டிருந்த சிறுமி ஒருத்தியை கடத்திச் சென்று கப்பம் கோரிய சம்பவம் ஒன்று சுவிற்சர்லாந்து மாநில பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் யாழ்பாணத்திலிருந்து அரசியல் தஞ்சம்கோரி இவ்யுவதி சுவிற்சர்லாந்து வந்துள்ளார். இவரது பயண ஒழுங்குகள் யாவும் யுவதியின் சிறியதந்தை முறையான சபாரட்ணம் சிறிமுருகன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவரது பயணத்திற்காக சபாரட்ணத்தினால் பயணமுகவருக்கு பணமும் வழங்கப்பட்டுள்ளது.

சிறுமி வந்தடைந்து இருவடங்களின் பின்னர் சிறுமியின் பெற்றோரிடம் மகளை சுவிற்சர்லாந்துக்கு அழைக்க செலவிட்ட பணத்தை கேட்டு நெருக்கிவந்த சிறிமுருகன், பெற்றோர் அப்பணத்தை வழங்க தா மதித்தபோது வன்செயல்ஊடாக பணத்தை பெற முனைந்துள்ளார். டீரிகோண் (Dietikon) பிரதேசத்தில் புலிகளுக்கான நிதி சேகரிப்பாளரான சிறிமுருகன் புலிகளியக்கத்தினரால் நிர்வகிக்கப்படுகின்ற தமிழ் இழைஞர் அமைப்பைச் சேர்ந்த இழைஞர்களை கொண்டு சிறுமியை கடத்தியுள்ளார்.

பாடசாலை சென்று கொண்டிருந்த சிறுமியை 14ம் திகதி 7.14 மணியளவில் லீமாட் பிளாட் போஸ்ட் க்கு அருகில் வைத்து பிடித்து பலவந்தமாக வாகனமொன்றில் ஏற்றிய இளைஞர்கள் அவரது கண்களை கட்டி கொண்டு சுமார் 45 சிமிட நேரம் வாகனமோடி ஓர் அறை ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குவதைது சிறுமியை அடித்து துன்புறத்திய இளைஞர்கள் பெற்றோரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். பின்னர் பிற்பகல் 15 மணியளவில் கண்ணைகட்டி வாகனத்தில் ஏற்றிய அவர்கள் யுவதியை மீண்டும் சூரிச் கொண்டுவந்து சீல்குவெ எனுமிடத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.

அதேநேரம் யுவதி கடத்தப்படுவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் யாழ்பாணத்திலுள்ள அவரது பெற்றோரை தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் சிறிமுருகனின் பணம் வழங்கப்படவிட்டால் மகள் கடத்தப்படுவார் என்ற தகவலையும் தெரியப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளின் நிதிசேகரிப்பாளரான சிறிமுருகன் மக்களிடம் சேகரித்த பணத்தில் தனது மனைவியின் சகோதரியின் மகளை அழைத்துக் கொண்டு அப்பணத்தை உறவினரிடம்மிருந்து பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் புலிகளையே பயன்படுத்தியுள்ளார். அப்துல்லாவின் நெருங்கிய சாகான இவர் குறிப்பிட்ட கடத்தல் விடயத்தில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என நம்பப்படுகின்றது.


3 comments :

thanu January 24, 2011 at 12:48 AM  

iam her brother i do'nt believe it she is cheating ours

Anonymous ,  January 24, 2011 at 1:17 AM  

இப்ப விளங்குதா? புலிப்பினாமிகளின் சேட்டைகள் எந்தளவுக்கு போய்விட்டது என்று..
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் கைவண்ணத்தை காட்டத் தொடங்கிவிட்டாங்கள்.
எல்லாவிற்றிக்கும் காரணம் புலம்பெயர் மண்டை கழண்ட மந்தைகளே.

Anonymous ,  January 26, 2011 at 9:56 PM  

I also know her. I'm related with her and i don't know anybody else who could cheat better than her. She cheated her ex-boyfriend and is now engaged with another guy. WE WILL WAIT AND SEE HOW LONG THIS RELATIONSHIP WILL RESIST. GOD WON'T BLESS HER!!!!!!!!!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com