தமிழன் தமிழன் என்று மிஞ்சி இருக்கும் தமிழனையும் கொன்று விடாதீர். இலங்கையன்
இலங்கையில் இன்னமும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் அந்த மக்களை தயவு செய்து வாழவிடுங்கள். இங்கு பாதுகாப்பாக வாழும் நீங்கள், அங்கு வாழும் அப்பாவிகளை, பணயம் வைத்து சூதாட்டம் ஆடாதிர்கள். நீங்கள் இங்கு நடாத்தும் போராட்டமெல்லாம் இன்னமும் அந்த அப்பாவி மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் என்பதை மறந்து விடாதீர்கள்.
எங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன? இன்று என்ன தேவை? இவற்றையெல்லாம் முதலில் சிந்தியுங்கள். ஜப்பான் 2ம் உலகப்போரின் பின் எப்படி இருந்தது? இன்று எப்படி? உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் நிலைக்கு வந்தது? கல்வி ..கல்வி..கல்வி...
நாமும் உடனடியாக செய்யவேண்டியது எவ்வளவோ இருக்க, தயவு செய்து இந்த வடிவேல் காமடி எல்லாம் தேவையா? சற்று சிந்தியுங்கள். நாம் வீரம் பேசும் நேரம் இதுவல்ல, மாறாக விவேகத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதற்கேற்ப வகையிலே காரியங்களை மேற்கொள்வோம்.
எமது முதுகிலே சவாரி செய்துகொண்டிருக்கும் , செய்ய முயற்சிக்கும், நபர்களை இனம் காணுங்கள்!!!!!. குறிப்பாக இந்திய அரசியல் வாதிகள் சிலர், திரைப்படதுறைசார்த்த சிலர்,இவர்கள் யார் ? இவர்கள் காலத்துக்குக்காலம் எப்படி குத்துக்கரணம் அடித்திருக்கிறார்கள்? யார் யாரோடு அரசியல் செய்திருக்கிறார்கள்? இவர்களின் நோக்கம் என்ன? வன்னியிலே செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்க, நாம் கோமாளித்தனமாக
போட்டோவுக்கு கேக் ஊட்டுவது, புலிக்கொடியை தோளில் போட்டுக்கொண்டு ஆடுவது, விமானநிலையத்தை முற்றுகையிடுவது, " இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?,, " மானமுள்ள தமிழன் மண்டியிடமாட்டான்,, " மீண்டும் எழுவோம் அலையாய் வருவோம்,, போன்ற உசுப்பேத்தலை நிறுத்தி , நாம் 6 அறிவு படைத்த மனிதர்களாக நடப்போமா? இல்லை நாம் இன்னமும் வளர்ச்சி பெறாத இனமாக இருக்கப்போகின்றோமா?
சிந்தியுங்கள்..................................."
கற்க கசடற கற்க கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக.,,
3 comments :
சரியாக கூறியுள்ளீர்கள்.
புலம்பெயர் சுயநல மூதேவிகளுக்கு ஏன் இங்கு தமிழ், தமிழீழம் தேவை?
இங்கு திரும்பி வருவாங்களா?
tamilan thaan thirippiyum tamilanai kollappookinraan.adatkuththaan in the london il ulla peekal thudikkuthugal.
சரியான விடயத்தை தெளிவாய் உரிய நேரத்தில் உரிமையுடன் உண்மையாய் கூறியுள்ளீர்கள்.
Post a Comment