Thursday, November 18, 2010

இராமர் பட்டாபிஷேகமும் ராஜபக்ஸ்ச பட்டாபிஷேகமும். வ.அழகலிங்கம்

இராமர் பட்டாபிஷேகத்தில் அரியணை அனுமான் தாங்கினார். அங்கதன் உடைவாள் ஏந்தினார். இராமன் கொன்ற வாலியின் மகானான அங்கதன்கையிலே உடைவாளைக் கொடுத்துவிட்டு இராம லக்குமணர்கள் வெறுங்கையோடு நின்றார்கள். இந்தப்பாத்திரம் பழிக்குப் பழிவாங்காமையை நிர்மாணிப்பதற்காகக் காட்டப் பட்டது. அங்கதன் மேல் தான் அசையாத நம்பிக்கையை வைத்திருப்பதை நிரூபிப்பதற்காக அங்கதனிடம் அயோத்தி ராமனின் உடைவாள் கொடுக்கப்பட்டது.

இராஜபக்ஸ்ச பட்டபிஷேகத்திலும் கே.பி மேல் வைத்த அசையாத நம்பிக்கையைப் புலிகளுக்குக் காட்டுவதற்காக ராஜபக்ஷ்சவின் பொடிகாட் பிஷ்டோலைக் கேபியிடம் கோடுத்தே பட்டாபிஷேக வைபவம் நடைபெற வேண்டும். அப்படியானால் அரியணை ஆர் தாங்குவது. தெற்கு நோக்கிப் பறந்த அனுமானைப் போலவே கருணா அம்மானும் தெற்கு நோக்கிப் பறந்தவர். ஆதலால் அரியணை கருணாதான் ஏந்த வேண்டும்.

ராஜபக்ஷச அரசே இது தவறு. வீர விபூஷணன் ஆசனம்தான் கே.பி க்கு வழங்கப்பட வேண்டும். தமிழனும் தமையனுமான இராவணன் அனியாயம் செய்யும் பொழுது அந்த அனியாயத்தை ஒழிப்பதற்காக வீரவிபூஷணன் ராமர் பக்கம் வந்தான்.

அதேபோல் அண்ணனும் தமிழனுமான பிரபாகரன் அளவற்ற அனியாயங்களைச் செய்யும்பொழுது அந்த அனியாயத்தை ஒழிப்பதற்கா ராஜபக்ஸ்ச பக்கம் வந்த வீரனான கே.பியை வீரவிபூஷணனது ஆசனத்தில்தான் இருக்க விடவேண்டும்.

என்ன கே.பியை விளங்காமல் பேசுகிறீர்கள். கே.பியை இலகுவில் விளங்க இயலாது. அவர் ஒரே நேரத்தில் ரெலோ இயக்கத்திலும் இருந்து அதே நேரத்தில் புலி இயக்கத்திலும் இருந்தவர். அவர் ஒரே நேரத்தில் புலிப் புரட்சியையும் ஆதரித்து அதன் எதிர்ப்புரட்சியையும் ஆதரித்தவர்.

கொலைகார ஆயுத வியாரம் செய்து அதன்பின் கோதபாய வீட்டில் புத்த அனுக்கிரகம் பெற்று ஜீவகாருண்ய சீலரின் புகழ்பாடியவர். கே.பி ஆன்மாவும் சிவமும் ஒன்று என்று சொல்லும் அத்துவிதக் காரர் அல்லர். அவர் ஆத்மா வேறு சிவம் வேறு என்று சொல்லும் துவிதக் காரர். அன்பும் சிவமும் இரண்டென்று சொல்லும் அறிவாளி. அன்பே சிவமென்று சொல்லும் ஞான சூனியமல்ல. ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்முடியாது என்ற பைபிள் உபதேசம் சரியென்றால் எப்படி கேபிக்கு குருசந்திர ராஜயோகம் கிட்டியிருக்கும்?

பட்டாபிஷேகத்திலே சாமரை வீசுகின்ற பொறுப்பை சிவாஜிலிங்கம் கேட்டிருக்கிறார். அதை அவரிடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. அப்படியானால் இப்பெரு விழாவின் ஊதுகுழல் யாரோ.
பூபாளத்தையும் முகாரியையும் இராகமாளிகையாக ஒரே நேரத்தில் ஊதவல்ல அரசவால் ஊதுகுழல்களுக்கு ஊதுகுழலுக்கு ஏற்கனவே அச்சவாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அது இங்கே வந்து நேரடியாக ஊதாத பட்ஷதில் அது இன்டர்நெட் மூலம் ஊதும். அப்படியானால் ஊமைக்குழலை ஒத்து ஊதுவது யாரோ. ஊமைக் குழல் வாசிப்பதற்கு ஊமைக்குழல் அனங்கன் டீ.பி.எஸ்.ஜெயராயா வருகிறார்.

சங்கீதம் பாடுவது யாரோ. சரச சாம தான பேத தண்டம் என்ற ஹிந்தோள ராகத்தில் உள்ள தியாகராச சுவாமிகளின் கீர்தனையை மனோரஞ்சன் வாசிக்க ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கான றிகேசலை அவர் ரோறொன்ரோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தீபவளி பிரபா அசுர அழிவு விழாவிலே பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். அவர் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்டாலும் அவர் சரச சாம தான பேத தண்டம் பாட ஒத்துக் கொண்டிருக்கிறார்.

சுவாமி ராஜ ராஜ ராஜபக்ஸ்சவுக்கு கட்டியம் கூறுவது யார்? வீரவன்சவைத் தவிர அதற்கு வேறு ஒருவருமே பொருத்தமில்லாதவர். மேடை மேடையாக ' யுத்தத்தை வெறிதாக்கியமாதிரி நாட்டையும் வெறிதாக்க இருக்கும் சேனாதிபதி நாயக்கயாவுக்கு ஜேயவேவா என்று எத்தனையோ ஆயிரம் தடைவ சொல்ல்ப் பழக்கப்பட்டவர் ஆதலால் அவரே அதற்குப் பொருத்தம்.

மாவிலை தோரணம் கட்டுவதற்குயாரை விடுவோம். சபாஷ். அதற்கு இருக்கவே இருக்கிறார் டொக்டர் மேர்வின் சில்வா. அவர் ஏற்கனவே மாமரத்தோடு பரீச்சயம் ஆனவர். சமுத்தி ஊழியரை மாமரத்தோடு கட்டி வைத்து அடித்த மகானுபாவலர். ஏற்கனவே அந்த முறையை எதிர்காலத்தில் விஸ்தரிப்பதற்காக எல்லோரையும் மாமரம் நடும்படி போராடிக் கொண்டிருக்கிறார். இன்று நடக்கும் மாமர நாட்டு வைபவத்தைப் பற்றிக் கேள்ப்பட வில்லையா?

வைபவத்திற்குப் பல நாட்டவரும் பரிசில்களோடு வருவார்களே? யோசிக்க வேண்டாம். பரிசு வேண்டியே பழக்கப்பட்ட மிஷ்டர் ரென் பேர்ஷண்ட்.. இருக்கிறார். அவர் அவைகள் எல்லாவற்றையும் தானே வாங்குவார். விழாவிலே யாரும் மூர்ச்சையுற்று விழுந்தால் முதலுதவி செய்வது யாரோ? அப்பலோ போன்ற பல வைத்தியாசாலையை வைத்திருக்கும் கோதபாயா அதை உடனடியாகவே செய்வார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com