Monday, November 29, 2010

கொழும்பு இராணுவத் தலைமையகம் பத்தரமுல்லை செல்கின்றது.

இலங்கையில் உல்லாசப் பிரயாணிகளின் மையமாக திகழ்கின்ற நட்சத்திர ஹோட்டல்களை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் இராணுவத் தலைமையகம் அடங்கலான பிரதான இராணுவ முகாம்கள் புறநகர் பகுதியான பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ளது. சீன அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீன நிறுவனம் ஒன்றினால் இப்பகுதியில் உல்லாச ஹோட்டல்கள் அமைக்கப்படவுள்ளது.

இத்தகவல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் ஊர்ஜதப்படுத்தப்பட்டுள்ளது. கைத்தொழில் துறையில் உலகின் முன்னணி நிறுவன மாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாகவும் இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள் ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ் தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

களுத்துறை தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவைப் பிரிவு, களுத்துறை நகர சபையின் இணைய தள அங்குரார்ப்பண வைபவம் என்பன பிரதியமைச்சர் ரோகித அபேகுண வர்தன தலைமையில் களுத்துறை நகர மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் ஒவ்வொருவரும் தம் பொறுப்புக்களை சரியான துறையில் நிறைவேற்றினால் நாட்டி லுள்ள பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும். இதனை எவரும் மறுக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதும் என்னை பாதுகாப்பு அமைச்சு செயலாளராக நியமித்தார். அன்று அவர் என்னிடம் வழங்கிய பொறுப்பை அவரது வழிகாட்டலின் கீழ் முழுமையாக நிறை வேற்றியுள்ளேன். இப்போது ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம். மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் அடிப்படையில் நாட்டைப் பொருளாதார ரீதியாக மேம் படுத்தும் பொறுப்பு எம் எல்லோரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இதனூடாக நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம் படுத்தப்பட வேண்டும்.

அந்தடிப்படையில் நாட்டின் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் பயனாக வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன.

கடந்த முப்பது வருடங்களாக நாட்டில் யுத்தம் நிலவியது. இதன் காரணத்தினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வரவும், முதலிடவும் அச்சப்பட்டார்கள். இப்போது அப்படியான நிலைமை இல்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வத்துடன் இங்கு முதலிட முன்வருகின் றார்கள். இவர்களுக்கு தேவையான வசதி களை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமை யாகும். அதன் மூலம் தான் இலங்கையை அதிசயம்மிக்க நாடாக அபிவிருத்தி செய்ய முடியும்.

இந்தவகையில் சுற்றுலாத் துறையில் உலகில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ச்கிரில்லா இங்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை உல்லாசப் பய ணத்துறையில் முதலிட முன்வந்திருக்கின்றது. இவ்வாறு பல முதலீடுகள் நாட்டுக்குள் வந்த வண்ணமுள்ளன. இம்முதலீடுகள் நாட்டில் தொழில் வாய்ப்புக்களை உரு வாக்கும். அப்போது எல்லோரும் அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்த்திருக்கும் நிலைமை நீங்கும். அத்தோடு எமது மக்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமும் அவர்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளுவதும் சுயதொழில்களில் ஈடுபடுவதும் இலகுவாகி விடும்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறு வதுடன் மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com