Sunday, November 21, 2010

புலிப்பினாமிகளின் மேலுமோர் பிறாடு.

எமது பெரும்சொத்துக்கள் மாணவர்களே எனவும், அவர்களது கல்விக்கு உதவுங்கள் எனவும் புலம்பெயர் தமிழருக்கு மின்னஞ்சல்மூலமாக Caring Hands Centre - Sri Lanka என்ற அமைப்பு வேண்டுதல் அனுப்பி வருகின்றது. அவர்களால் அனுப்பப்படும் அச்செய்தியில் நாம் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல எனவும் தமக்கு பின்னால் எந்த அரசியல் நிகழ்சி நிரலும் இல்லை எனவும் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நல்ல விடயம் அவ்வாறாயின் மேற்படி அமைப்புக்கு உதவி செய்வதில் என்ன தவறு என குறிப்பிட்ட அமைப்பின் இணையத்தளத்தினுள் நுழைந்தோம். அங்கே படத்தொகுப்பு எனும் ஒருபகுதி காணப்பட்டது. அதிலே வன்னி மக்களின் நிலைமைகளை உணர்த்துகின்ற , வன்னியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள ஏழைகளின் படங்களும் இணைக்கப்பட்டிருந்தது.

சற்று கீழே சென்றபோது கீழே இணைக்கப்பட்டுள்ள இப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. அதிலே கல்வித்திணைக்கள அதிகாரிகள் , அதிபர்கள் மற்றும் நலன்விரும்பிகளுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்டது எனவும் : வன்னியிலே மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படும்போது எனும் படங்களும் இணைக்கப்பட்டிருந்தது. அப்படங்களின் திகதியும் உள்ளது. அத்திகதி எப்போது என அவதானித்போதுதான் எதிர்வரும் 28.11.20100 என்பது தெரியவந்தது. புலிகளும் இவ்வாறு (TOO MUCH) ரூ மச் படம்காட்டப்போய்தான் மாட்டுப்பாட்டார்கள் என்பதை குறிப்பிட்ட அமைப்பினருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com