Sunday, November 21, 2010

ஜெர்மனி நாடாளுமன்றத்தை தாக்க அல்கொய்தா திட்டம்

ஜெர்மனி நாடாளும‌ன்ற‌த்தை அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பல‌‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த தகவ‌லை ஜெர்மனியில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் புகுந்து அங்குள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இச்செயலில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் 2 பேர் கடந்த 8 வாரங்களுக்கு முன்பே பெர்லினுக்கு வந்து விட்டனர். மற்ற 4 பேர் விரைவில் ஜெர்மனிக்குள் நுழைய உள்ளனர். அவர்களில் தலா ஒருவர் வீதம் ஜெர்மனி, துருக்கி, வடஆப்பிரிக்கர் ஆவர். ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை.

இந்த தாக்குதலை வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல்கள் ஜெர்மனியின் உள்துறை அமை‌ச்ச‌ர் தாமஸ்டி மெய்சியருக்கு போனில் மிரட்டல் மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும் அப்பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜெர்மனியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதபற்றிய தகவல்களை வெளியிட்ட உள்துறை அமை‌ச்ச‌ர் தாமஸ், காவ‌‌ல்துறை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com