Saturday, November 13, 2010

பா.உ சிறிதரனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. இராணுவப் பேச்சாளர்.

வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒன்றுகூடல்களை செய்கின்றபோது அவற்றினை தடுக்கும் நோக்கில் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் செயற்படுவதாகவும் , அவ்வாறு செயற்பட்ட புலனாய்வுத்துறை உறுப்பினர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விவாதத்தில் ஈடுபட்டதாகவும் வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபஹய மடவல அவர்களை இலங்கைநெற் தொடர்பு கொண்டுகேட்டபோது, முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அவர் தெரிவித்தார்.

பா.உ சிறிதரன் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்று படைத்தரப்பினரால் வீடியோ செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அவ்வாறு செய்யப்பட்டிருக்குமாயின் அதன் நோக்கம் என்னவெனக் கேட்டபோது, இராணுவத்தினர் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தெரிவித்த அவர், நாட்டில் இன்று பெரும்பாலானோரின் கைகளில் தொலைபேசிகள் உண்டு அவற்றினூடாக எந்த நேரத்திலும் படமெடுக்கவும் வீடியோ பண்ணவும் முடியும், அத்துடன் பொது நிகழ்வொன்றை படமெடுப்பதற்கும் , வீடியோ செய்வதற்கும் நாட்டின் ஜனநாயக உரிமை இடமளித்துள்ளது. எனவே இதை குற்றம் எனக் குறிப்பிட்டு விசாரணைகளை நாடாத்த முடியாது. இது ஒரு திட்டமிட்ட செயலென முறைப்பாடு கிடைத்தால் அது வேறுவிடயம் என்றார்.

அதேநேரம் பா.உ சிறிதரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட சம்பவத்தை வீடியோ செய்த நபர் கிளிநொச்சி பிரதேசத்தில் திருமணமாகி வசித்துவருபவர் எனவும், நிஸாம் என்ற முஸ்லிம் பெயரில் அங்கு உள்ளதாகவும் அவர் இலங்கை புலனாய்வுத்துறையை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

2 comments :

Anonymous ,  November 14, 2010 at 2:21 AM  

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் தமிழ் கூத்து அரசியல் வாதிகளின் தொழில் இதுவே.

அன்று புலிகளின் சேவகனாகவும், கூலிகளாகவும் செயல்பட்ட கூத்து அணி இன்று தங்கள் கதிரைகளை தொடர்ந்தும் தக்கவைத்து, தங்கள் பொக்கட்டுக்களை நிரப்புவதற்காக செய்யும் கூத்துக்களில் ஓன்று தான் இப்படிப்பட்ட அறிக்கைகளும் கூட்டங்களும்.

ஆனால், இதுவரைக்கும் உருப்படியாக செய்தது என்ன என்றால் ஒன்றுமே இல்லை.

பன்னாடை பரதேசிகள் இன்னும் திருந்துவதாக இல்லை.

Anonymous ,  November 15, 2010 at 3:04 AM  

Hello Sritharan what moral right do have to talk about the violations by the armed forces.When you were the principal you bloody tiger stooge recruited innocent pupils in your school and sent them sent them for tiger training.Now the innocent pupils are no more ,not your children.You and your children are living a lavish life while the parents of the ones you recruited for tiger training are living in poverty.You tiger stooges should take the whole responsibility for plight of the tamil people.Our people were living a very good life and it was the tiger lackeys TNA started and propagated the war and our people are now suffering.You tiger lackeys misled our people and still misleading our people to fill the parliament seats.Please leave our people alone.You are enjoying you life happily with your children.Can you bring back the lives of the ones you recruited for tiger training.
Kiruba Muthukumar

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com