Thursday, October 21, 2010

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பே அமெரிக்க உளவுத்துறைக்கு எச்சரிக்கைகள் கிடைத்திருந்தன By Patrick Martin

American press Sundayஇல் இருக்கும் நீளமான அறிக்கைகளின்படி, டிசம்பர் 2008இல் இந்தியாவின் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத குழுவின் நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே பல எச்சரிக்கைகளை அமெரிக்க உளவுத்துறை பெற்றிருந்திருக்கிறது. துப்பாக்கி தோட்டக்களாலும், வெடிகுண்டுகளாலும் 166 நபர்கள் கொல்லப்பட்ட அந்த தாக்குதலுக்கான தயாரிப்பில் ஓர் அமெரிக்க தகவலாளி ஓர் உயர்மட்ட பாத்திரம் வகித்திருந்தார்.

Washington Post மற்றும் New York Times இரண்டுமே விஷயங்களை விளக்கமாக அளித்திருந்தன. அவை குறைந்தபட்சம் ஓரளவிற்காவது, பல உயர்மட்ட அதிகாரிகளைப் பதில்கூற வேண்டிய நிலைக்குத் தள்ளிய அந்த நடவடிக்கை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்புகளின் கட்டுப்பாட்டை நாசமாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாக தெரிகிறது என்று விளக்கி இருந்தன. பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளின்கீழ் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டிருக்கும் ஒருவரும், தற்போது அமெரிக்க அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பளித்து அதன் காவலில் இருப்பவருமான ஒரு பாகிஸ்தானிய-அமெரிக்கர் டேவிட் சி. ஹெட்லியின் (David C. Headley) இரண்டு முன்னாள் மனைவிமார்களையும் கூட இந்த பத்திரிகைகள் நேர்காணல் செய்திருந்தது.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைகள் பயங்கரவாத குழுக்களுடன் (இவற்றில் சில அல்கொய்தாவுடன் தொடர்புபட்டவை) சந்திக்கும் இந்த இருண்ட உலகைக் குறித்த ஒரு பார்வையை இந்த அறிக்கைகள் தருகின்றன. 9/11 பயங்கரவாத தாக்குதல்களைப் பொறுத்த வரையில், அமெரிக்க முகமைகள் மும்பை பயங்கரவாத அட்டூழியம் நடத்தப்பட்ட விதத்தை வேறுவிதமாக பார்ப்பதாக தெரிகிறது, அல்லது அவை நேரடியாக ஊக்கப்படுத்தி அதற்கு உதவி இருந்தன.

ஒரு பாகிஸ்தானிய இராஜாங்க அதிகாரிக்கும், பிலடெல்பியாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்க பெண்மணிக்கும் மகனாக அமெரிக்காவில் பிறந்த ஹெட்லி, அமெரிக்க குடியுரிமையும் கொண்டிருக்கிறார். அவருடைய உண்மையான பெயர் தாவுத் கிலானி, ஆனால் 2006இல் சட்டபூர்வமாக தம்முடைய பெயரை மாற்றிக் கொண்ட அவர், ஆங்கிலேய முறையிலான முதல் பெயரையும், அவருடைய அன்னையின் முதல் பெயரையும் சேர்த்து வைத்து கொண்டார். சந்தேகத்திற்கிடமின்றி ஏனென்றால், டேவிட் ஹெட்லி என்ற பெயரைக் கொண்டு அவரால் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இன்னும் சுலபமாக பயணிக்க முடியும்.

எதிர்கால தாக்குதலுக்கான இடங்களைக் கண்டறிவதற்காகவும், அத்துடன் இரவிலும் பொருட்களைப் பார்க்க உதவும் சாதனங்கள் (night-vision goggles) போன்ற உபகரணங்களை வாங்குவதற்காகவும் மும்பைக்குத் தொடர்ந்து பயணிக்கும் பொறுப்புகளும் இஸ்லாமிய போராட்ட அமைப்பான இலஷ்கர்-இ-தொய்பாவில் அவருக்கிருந்த பொறுப்புகளில் உள்ளடங்கி இருந்தன.

ProPublica செய்தி சேவையால் தயாரிக்கப்பட்டதும், Washington Post இல் வெளியானதும், மற்றும் Timesஇல் தொடர்ச்சியாக தொடர்ந்து கவனிக்கப்பட்ட கட்டுரைகளும் இந்த விஷயத்தில் பெரும் விபரங்களைத் தருகின்றன. இவை, இந்த மனிதருக்கும் அமெரிக்க உளவுத்துறைக்கும் இடையில் இருந்து வந்த கால் நூற்றாண்டிற்கும் மேலான தொடர்புகளைப் படம்பிடித்து காட்டுகின்றன.

வேறுபட்டவைகளாக காட்டிக்கொள்ளும் குழுக்களுடனான—பாகிஸ்தானிய உளவுத்துறை, பயங்கரவாதிகள் மற்றும் அமெரிக்க போதை மருந்து புலனாய்வாளர்கள் ஆகியோருடனான— ஹெட்லியின் தொடர்ச்சியான, ஏன் உணர்ச்சிபூர்வமான தொடர்புகளையும் குறித்து கூட Times இதழ் எழுதியது.

தற்போது ஐம்பது வயது நிரம்பிய ஹெட்லி, 1988இல் ஜேர்மனிக்கு ஹெராயின் கடத்துவதில் ஈடுபட்டமைக்காக போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட போது தான், அவர் முதன்முதலாக அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தார். போதைப்பொருள் தடுப்பு ஆணையத்திற்கு அவர் ஒத்துழைப்பு அளித்தார். பின்னர், நான்காண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார். 1997இல், ஹெராயின் கடத்தியமைக்காக நியூயோர்க்கில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் Post செய்தியின்படி,“உளவுத்துறை அதிகாரிகள் விரைவிலேயே அவருக்கு விடுதலை பெற்றளித்தனர்; அவரும் ஒரு முக்கிய தகவலாளியாக (informant) மாறினார் என்று ஆவணங்கள் காட்டுகின்றன."

'பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதத்தில் அவர் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கு முன்பே, போதைப்பொருள் தடுப்பு ஆணையம் ஹெட்லியை ஒரு தகவலாளியாக கருதி கைவிட்டிருந்தது' என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்ததாக இரண்டு பத்திரிக்கைகளுமே குறிப்பிட்டன. இந்த அறிக்கைகள் தான், மும்பை தாக்குதலில் இருந்து அமெரிக்க அரசாங்கத்தை விலக்கி வைக்க பயன்படுத்தப்பட்ட தவறான உத்தியோகபூர்வ செய்திகளாக தெரிகின்றன.

Times இதழின் கருத்துப்படி,“2001இன் இறுதியில், அதாவது கிடைத்த தகவல்களின்படி ஹெட்லி அவருடைய முதல் பயங்கரவாத பயிற்சியை பெறுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவருடனான தங்களின் தொடர்புகளைப் போதைப்பொருள் தடுப்பு ஆணைய அதிகாரிகள் முடித்துக் கொண்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்துடனான திரு. ஹெட்லியின் தொடர்புகள் நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக சில இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்."

Times இதழ் உள்ளார்ந்து இருந்த இந்த விசித்திரமான கால முரண்பாட்டை குறித்து கேள்வி எழுப்பவில்லை. 2001இன் கடைசி சில மாதங்களில் அதாவது 9/11 தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக, ஓர் அமெரிக்க உளவுத்துறை ஆணையம் ஒரு நீண்டகால பாகிஸ்தானிய-அமெரிக்க தகவலாளியுடன், அதுவும் ஒசாமா பின்லேடன் தப்பியோடி இருந்த ஒரு நாட்டில் பேசப்படும் மொழியில் வல்லமைப் பெற்ற ஒரு தகவலாளியுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்டது என்பதை அதன் வாசகர்கள் நம்பவேண்டும் என்று அது நினைத்தது போலும்.

இன்னும் அதிகமாக சொல்லப்போனால், போதைப்பொருள் தடுப்பு ஆணையம் ஹெட்லியை CIA போன்ற ஒரு சக்திமிக்க அமைப்பிடம் ஒப்படைத்ததன் மூலமாகவே அவரைக் "கைவிட்டது". CIA அவருடைய குற்றங்களைக் குறித்து எதையும் கூறாமல், அவருடைய கலப்பு மரபியம், மொழித்திறன் மற்றும் பாகிஸ்தானிய தொடர்புகளை விலைமதிப்பிலாததாக மதித்திருக்கக்கூடும்.

ஹெட்லி பாகிஸ்தானிலும் திருமணம் ஆனவர் என்பதை அறிந்ததும் ஏற்பட்ட ஓர் உட்பூசலைத் தொடர்ந்து, அவருடைய அமெரிக்க மனைவி 2005 ஆகஸ்டில் நியூயோர்க்கில் உள்ள FBI தலைமையிலான கூட்டு பயங்கரவாத தடுப்புப்படையைச் (Joint Terrorism Task Force) சென்று சந்தித்தார். இலஷ்கர்-இ-தொய்பாவில் அவருடைய கணவரின் பாத்திரத்தை குறித்து அறிவித்த அவர், பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ஹெட்லி கலந்து கொண்ட போதே, வருமானத்துடனான அமெரிக்க அரசாங்க தகவலாளியாக இருக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

மூன்று தருணங்களில் அந்த பெண்மணியிடம் விசாரணை நடத்திய FBI, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹெட்லி ஒருசமயம் அவருடைய மனைவி மீது நடத்திய சிறிய ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்காக நியூயோர்க் நகர போலிஸ் அவரை கைது செய்தது. பின்னர் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தது. அதன்பின்னர் அது ஒருபோதும் அவரை கைது செய்யவில்லை.

Los Angeles Timesஇல் திங்களன்று வெளியான ஒரு செய்தி குறிப்பிட்டதாவது: “அதிகாரி ஒருவரின் கருத்துப்படி, கிடைத்த துப்புகளை புலனாய்வு செய்த FBI, கிடைத்த தகவல்கள் ஓர் அமெரிக்க குடிமகனின் மீது விசாரணையைத் தொடங்கும் அளவிற்கு முக்கியமான சட்டபூர்வ ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதாக தீர்மானித்தது. சட்டவிரோதமான அல்லது அச்சுறுத்தலான அல்லது வன்முறை நடவடிக்கைகளின் எல்லைக்குள் வராத அமெரிக்க குடிமக்களின் அரசியல் நம்பிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்த முடியாதபடிக்கு சட்டத்தால் FBI தடுக்கப்பட்டிருக்கிறது."

அமெரிக்க குடிமக்களின், குறிப்பாக அரேபிய-அமெரிக்க அல்லது பாகிஸ்தானிய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை ஓர் அர்த்தமற்ற விரோதத்துடன் மீறுவது குறித்த போலிஸ் இயந்திரத்தின் இந்த காட்சியமைப்பு, வெளிப்படையாக ஒரு பூசிமொழுகும் வேலையாக இல்லாதபட்சத்தில், கேலிக்குரியதாக தான் இருக்கும். அவர் யார் என்பதும், அவர் அவர்களின் ஊதியத்தில் இருந்தார் என்பதும் இந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும் என்பதால் தான், தெளிவாக ஹெட்லி மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது.

ஒரு தெளிவற்ற விளக்கத்தைக் கூட அளிக்கத் தோன்றாத அளவிற்கு, இந்த காலவேறுபாடு FBIக்கு முக்கியமற்றதாக இருக்கிறது. பாகிஸ்தானில் பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் அவர்களை அவர்களே இலண்டன் சுரங்கப்பாதையிலும், பேருந்துகளிலும் ஜூலை 7, 2005இல் வெடிக்கச் செய்த ஒரு மாதத்திற்குப் பின்னர் தான் (இதில் 51 பேர் கொல்லப்பட்டனர்), ஹெட்லியின் மனைவி அவரை பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்டவராக கருதத் தொடங்கினார். வெர்ஜினியாவில் ஒரு வழக்கில், இஷ்கர்-இ-தொய்பாவின் கொள்கை பரப்புனர்களும், பயிற்சியாளர்களும் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையுடன் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Times செய்தியின்படி, மும்பை தாக்குதலுக்காக ஹெட்லி மிக தீவிரமாக தயாரிப்புகளைச் செய்ய தொடங்கினார். அந்த நாளிதழ் குறிப்பிடுவதாவது: “ஜூனில், சிகாகோவில் இந்திய புலனாய்வாளர்களுக்கு அளிக்கப்பட்ட திரு. ஹெட்லியின் வாக்குமூலத்தின்படி, ஹெட்லி அவருடைய பயணங்களின் போது, தங்கியிருந்து செயல்பட வசதியாக மும்பையில் ஒரு வீட்டையும், அலுவலகத்தையும் அமைக்க 2006இன் தொடக்கத்தில் திரு. ஹெட்லிக்கு $25,000ஐ பாகிஸ்தானிய உளவுத்துறை ஆணையத்தின் ஓர் அதிகாரி ஒப்படைத்தார்."

2007இன் பிற்பகுதியில், மொராக்கோவில் பிறந்த ஒரு பெண்மணியான இஃபைஜா ஓடல்ஹா (இவர் ஹெட்லியின் மூன்றாவது மனைவி) பயங்கரவாத அமைப்புகளுடன் தம் கணவருக்கு இருக்கும் ஈடுபாடு குறித்து எச்சரிக்க பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் சென்றார். Times செய்தியின்படி,“ஹெட்லியின் ஒரு புகைப்படத்தைக் கூட தூதரக அதிகாரிகளுக்குத் தாம் காட்டவில்லை என்று அவர் கூறுகிறார். அவர் 2007 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருமுறை தாஜ்மஹால் ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் தெரிவிக்கிறார். ஹோட்டல் ஆவணங்களும் அவர்கள் தங்கி இருந்ததை உறுதி செய்கின்றன."

டிசம்பர் 2008இல் நடத்தப்பட்ட தாக்குதலின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக தாஜ்மஹால் ஹோட்டலும் இருந்தது. ஒரு சிறிய படகில் மும்பைக்குள் நுழைந்த பத்து நபர்கள் கொண்ட குழுவின் ஒரு பகுதியாக இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள் டஜன்கணக்கான மக்களை அவர்களின் அறைகளிலும், ஹோட்டல் அறை வளாகங்களிலும் படுகொலை செய்தனர்.

அவருடைய கருத்துக்களை வெளியிடுவதற்காக தூதரகத்தில் இருந்தபோது, அமெரிக்க அதிகாரிகளின் பிரதிபலிப்பு குறித்து திருமதி. ஓடல்ஹா ஓர் அசாதாரண விஷயத்தை அளித்தார்: “அவரொரு பயங்கரவாதியோ அல்லது உங்களுக்காக பணியாற்றும் ஒருவரோ அல்ல என்று நான் அவர்களிடம் கூறினேன்."“மறைமுகமாக, அவர்கள் என்னை வெளியேறும்படி கூறினார்கள்."“அவர்களுக்காக நான் எதையும் செய்ய தயார் என்று நான் கூறினேன். … “அவர் ஒரு பயங்கரவாதி! நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்' என்று நான் கத்திக் கொண்டிருப்பது போல் இருந்தது" என்று அவர் Timesக்குத் தெரிவித்தார்.

New York Timesஐ பொறுத்தவரையில், அமெரிக்க அரசாங்கத்தால் திட்டமிட்டு தடைச்சுவர் எழுப்பப்படும் இந்த விஷயம், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இருக்கும் மற்றொரு மிக முக்கியமான தகவல்பரிமாற்ற நிலைமுறிவைக்" குறிக்கிறது. 9/11 பொறுத்த வரையில், அமைப்பில் இருக்கும் குளறுபடியோ அல்லது அதன் திறமையின்மையோ மட்டுமல்ல, மாறாக அமெரிக்க அரசாங்கத்திற்கும் ஒரு மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலின் மோசடியாளர்களுக்கும் இடையில் இருக்கும் நேரடி சிக்கல்களையே இந்த ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்பதை அமெரிக்க "செய்தி ஆவணங்களால்" எடுத்துக் கூற முடியவில்லை.

2009இல் கைது செய்யப்பட்ட பின்னரும் கூட ஹெட்லிக்கு இந்தியாவில் நுழைவதற்கு அனுமதி அளித்த இந்திய அரசாங்கம், இஸ்லாமாபாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் பயங்கரவாதம் குறித்த பெரும்பாலான வெற்று குறிப்புகளால் நிரம்பியிருந்த காரணத்தால் இதற்குப் பிரதிபலிப்பைக் காட்ட தவறியது என்ற முறையீட்டில் வெளிப்படையாகவே திருப்தி அடையவில்லை. இந்த விவகாரம் அடுத்த மாதம் ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய விஜயத்தின் போது அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் எழுப்பப்படும் என்று இந்திய நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com