Thursday, October 21, 2010

இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் மர்ம படகுகள்! புலன் விசாரணைகள் ஆரம்பம்

ராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இலங்கை படகில் வந்திறங்கிய , மர்ம நபர்கள் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் இலங்கை படகுகள் கரை ஒதுங்குவதும், படகில் வந்தவர்கள் தலைமறைவாகுவதும் வழக்கமாக உள்ளது. கடந்த காலங்களில் தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், சேரான்கோட்டை, வடகாடு கடற்கரை பகுதியில் கரை ஓதுங்கிய இலங்கை படகுகளை, கடற்படை, கஸ்டம்ஸ் மற்றும் போலீசார் கைப்பற்றினாலும், படகில் வந்தவர்கள் மட்டும் சிக்குவதில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவில் வடகாடு கடற்கரை பகுதியில், இலங்கை மன்னாரை சேர்ந்த பைபர் கிளாஸ் படகு ஒன்று கரை ஒதுங்கியது. 22 அடி நீளம் கொண்ட படகில் 15 குதிரை சக்தி கொண்ட சுசிகி இன்ஜின் உள்ளது. படகில் வந்தவர்கள் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை. இலங்கை மன்னார் மாவட்ட மீன்பிடி பதிவு எண் படகில் இருந்த போதும், படகில் வந்தவர்கள் மீனவர்களாக இருந்தால் தானகவே போலீஸ் ஸ்டேஷன் சென்றிருப்பார்கள். படகில் வந்து தலைமறைவானவர்கள் இலங்கையை சேர்ந்த கடத்தல் நபர்களா, புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களா என தெரியவில்லை. இதனிடையே, நேற்று முன்தினம் தனுஷ்கோடி கடல் பகுதியில், இலங்கை படகில் தனியாக ஒருவர் பயணம் செய்து வந்ததை, ஹெலிகாப்டரில் ரோந்து சென்ற கடலோர காவல் படையினர் பார்த்ததாகவும் தகவல் கிடைத்துள்ள நிலையில், படகில் வந்தவர்கள் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com