Friday, October 29, 2010

இடைக்கால அறிக்கையை அமுல்படுத்த ஆலோசனைக்குழு

கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுல்படுத்துவதற்காக முகவரமைப்புக்கிடையிலான ஆலோசனைக் குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் .நல்லிணக்க ஆணைக்குழுவானது 11.08.2010 இல் அமர்வுகளை ஆரம்பித்திருந்தது. 13.09.2010 இல் ஆணைக்குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அந்த இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கியமான சில விடயங்கள் அரசாங்கத்தினால் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது.உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியிலுள்ள காணிகள் உரிய முறையில் உரிமையாளருக்கு வழங்கப்பட அல்லது சமூக, அபிவிருத்தி தேவைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

அதேசமயம், 2009 மேயில் மோதல் முடிவடைந்த போது சரணடைந்த 11696 புலி உறுப்பினர்களில் சுமார் 5120 பேர் ஏற்கனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் ஒழுங்கிணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அரசியலமைப்பின் பிரகாரம் சகல பிரஜைகளினதும் மொழி உரிமைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இயல்பு நிலையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுல்படுத்துவதற்கு அனுசரணையாக முகவரமைப்புகளுக்கிடையிலான ஆலோசணைக்குழுவை அமைப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் அமைச்சரவைக்கு மேற்கொண்டிருந்த பரிந்துரையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com