ஐ.நாவிடம் வீரவன்ச மன்னிப்புகோர சந்தர்பத்தை ஏற்படுத்துங்கள். ஜனாதிபதிக்கு ஜயலத் கடிதம்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன் உண்ணாவிரதம் இருந்து சர்ச்சையை கிளப்பியமைக்காக விமல் வீரவன்ச பான் கீ மூனை சந்தித்து மன்னிப்புக்கோர சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்துங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில மேலும் குறிப்பிப்பட்டுள்ளமை வருமாறு :-
தாங்கள் இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக இம்முறை ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்குபற்றவிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். தங்களது அமைச்சரவை அமைச்சரகளில் ஒருவரான விமல் வீரவன்ச தங்களது அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஆவார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருடல்கள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, அதற்கு தனது கடுமையான எதிர்பையும் தெரிவித்துவரும் அமைச்சரான விமல் வீரவன்ச, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியின் அலுவலகத்தின் முன்னிலையில் கடுமையான உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தார்.
இதற்கு முதலும் ஒரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரைச் சந்தித்தபோது, தாங்கள் விமல் வீரவன்ச அமைச்சரையும் கலந்துகொள்ளச் செய்து பொது செயலாளரையும் அறிமுகப்படுத்தினீர்கள்.
அவ்வாறு இம்முறையும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வின் போது தங்களது பங்குபற்றலோடு, அமைச்சர் விமல் வீரவன்சவையும் அழைத்துச் சென்று கலந்துகொள்ளச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு விமல் வீரவன்ச அமைச்சரை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனையும் சந்திக்கச் செய்து அவரது, கடுமையான எதிர்பை நேரடியாக தனிப்பட்ட ரீதியில் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். அப்படியில்லையானால் பொதுச் செயலாளர் முன்னிலையில் மீண்டுமொருமுறை விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரும் சந்தர்ப்பம் ஏற்படலாம். அதுவும் இல்லையாயின் தான் செய்த அரச தேவையற்ற, பயனல்லாத செயல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் மன்னிப்பு கோறும் சந்தர்ப்பம் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு ஏற்படலாம்.
0 comments :
Post a Comment