நாயை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய இலங்கையர் கனடாவில் கைது
கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 51 வயதுடைய அஞ்சலோ அபயவிக்ரம என்பவர் நாயை பலாத்காரபடுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இவரது வழக்கு நேற்று புதன்கிழமை கனடா நீதிமன்றில் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாயின் உறுப்பில் பலாத்காரமாக ஆணுறையினை அணிவித்து சித்திரவதை செய்ததால் அந்நாய் பரிதாபமாக துடிதுடித்த சம்பவத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அந்நபர் கைதுசெய்யப்பட்டார். மிருகவதை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபரின் விசாரணை நேற்று நடைபெற்றபோது, தான் வேண்டுமென்று அந்நாயை சித்திரவதை செய்யவில்லை எனவும் அந்நாய் அடிக்கடி தனது வீட்டில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காகவே தான் அப்படி ஆணுறையினை அந்நாய்க்கு மாட்டிவிட்டதாகவும் சந்தேகநபர் மன்றில் தெரிவித்திருக்கிறார். மேலதிக விசாரணைகள் மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நபர் கடந்த 2007ஆம் ஆண்டு தனது நண்பருடன் கத்திக்குத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கும் இலக்காகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment