Thursday, July 15, 2010

பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்பட மாட்டாது. 20% மிதிவெடிகளே நீக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்திருந்தாலும் வடக்கிலுள்ள பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உயர் பாதுகாப்புவலயங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஒரு நாட்டிற்கு இவ்வாறான அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியம் எனவும் அமெரிக்காவில் கூட இவ்வாறு பாதுகாப்பு வலயங்கள் உள்ளதாகவும் தெரிவித்ததுடன் நாட்டில் யுத்தம் நிலவிய போது இவ் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லாது இருந்தால் மேலும் பேராபத்துக்களை சந்திக்க நேரிட்டிருக்கு மெனவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயங்களுக்கான இடத்தில் அரச காணிகள் இல்லாதவிடத்து தனியார் காணிகளை சுவீகரீப்பதற்கு அரசிற்கு அதிகாரம் உண்டு என தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாதுகாப்பு வலயங்களுக்காக எடுக்கப்பட்டுள்ள காணிகள் தனியாருக்கு உரியவை என உரிய ஆதாரங்களுடன் உரிமை கோரினால் நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கில் அரசின் கணிப்பீட்டின் பிரகாரம் 20 சதவீத மிதிவெடிகளே அகற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 90 சதவீதமானவை இராணுவத்தினராலேயே அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெளி நாட்டு நிறுவனங்கள் பல கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருப்பதன் பின்னணி சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அவ் நிறுவனங்கள் திருப்பியனுப்பப்படுவதற்கான முன்னேற்பாடாக அமைச்சரின் கருத்து அமைந்துள்ளது நம்பப்படுகின்றது.

மேலும் இதுவரை 26600 ஆயிரம் மிதிவெடிகள் 640 தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com