17 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்க பேச்சு.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும்,எதிர்க்கட்சிக்கும் இடையில் அரசமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பாக இன்று பேச்சுக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஐ.தே.கவின் பதில் தலைவர் கரு ஜயசூரிய,அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா,விஜயதாஸ ராஜபக்ஸ எம்.பி ,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரைக் கொண்ட உயர் மட்டக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸைச் சந்தித்து இப்பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
இருதரப்புக்கும் இடையில்இத்திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பாக பரஸ்பர இணக்கப்பாட்டை உருவாக்குவதற்காகவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது . சர்வகட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தீர்வு யோசனையை அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் இச்சந்திப்பின்போது வலியுறுத்தியும் உள்ளார்கள்.
0 comments :
Post a Comment