Wednesday, May 19, 2010

மட்டுநகர் பாடசாலை ஒன்றின் குளறுபடிகள்

மட்டக்களப்பு நகரின் பிரபல்யமான பெண்கள் பாடசாலை ஒன்றில் பல்வேறு குளறுபடிகள் இடம் பெறுவது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் கிறிஸ்தவ மாணவர்களையே அதிகம் கொண்டுள்ள மேற்படி பாடசாலையில் எந்த பாடசலையிலும் நடக்காதவாறு மாணவர்களது சீருடை மாற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக அரச பாடசாலைகளில் மாணவ மாணவிகளுக்கு வெள்ளை நிற சீருடை வழக்குவது வழமை. ஆனால் இந்தப்பாடசாலையோ அரச பாடசாலையாகவிருந்தும் வெள்ளை நிறத்தோடு சிவப்பு நிற சீருடையை மாணவர்களுக்கு அணிவித்து அழகு பார்ப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது.

மேலும் அந்த சிவப்பு துணியை வாங்கும் பொறுப்பு மாணவர்களது தலையிலையே கட்டப்படுகின்றது. இதனால் அங்கு கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவது கலைக்குரிய விடயமாகின்றது. இந்த வருடமும் குறித்த இப்பாடசாலையில் புதிய வடிவில் சீருடை மாற்றப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை விட அங்கு உயர்தரத்தில் கலைப்பிரிவுக்கு பெறுப்பான ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலசவ சீருடையை கொடுக்காமல் அசமந்தப்போக்குடன் நடந்துகொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது-- குறித்த மாணவி கடந்த டிசம்பர் மாதம் சாதாரணதர பரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருந்த வேளையில் குறித்த பாடசாலையில் சீருடை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இம்மாணவி தனக்கு உயர்தரம் தொடரக்கூடிய பெறுபேறுகளை பெற்று மீண்டும் அதே பாடசாலையில் இணைந்துள்ளார். இதன் பின்பு மீண்டும் இணைந்து கொண்ட பல மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்ட போதும் கூட சில மாணவர்களுக்கு வழங்காமால் தொடர்ந்தும் இழுபறி நிலைக்கு கொண்டுசென்றிருக்கின்றனர். குறித்த மாணவி சீருடை கேட்டவுடன் இப்போது எனக்கு நேரமில்லை என தட்டிக்கழித்துள்ளார் ஒரு ஆசிரியை. அதுமட்டுமல்லாது மறுநாள் அம்மாணவியை புதுசீருடை அணிந்து வருமாறும் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் இம்மாணவி பல கஸ்டத்தின் மத்தியில் கடையில் 600ருபாவுக்கு துணி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது மாத்திரம் இன்றி அப்பாடசாலையில் மாணவிகளை நல்வழிப்படுத்த வேண்டிய ராகி... எனப்படும் ஒரு ஆசிரியை மாணவிகளுக்கு தொடர்ச்சியாக கூடாத வார்த்தைப்பரயோகங்களை மேற்கொள்வதாகவும் மாணவிகள் கவலை தெரிவிக்கின்றனர். அத்தோடு இப்பாடசாலை பொதுவான அரச பாடசாலையாக இருந்த போதிலும் இதனை ஒரு தனி கிறிஸ்தவ பாடசாலையாக மாற்றும் முயற்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comments :

Anonymous ,  May 19, 2010 at 4:08 PM  

இன்று கிழக்கிலங்கையில் .
இதுவரைகாலமும் துன்பங்கள், இழப்புகள் காரணமாக எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்துள்ளது.

எத்தையோ மக்கள் எல்லாவற்றும் இழந்து விதவைகள், அனாதைகள், அங்கவீனமானவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் என்று நடைபிணமாக வாழுகின்றார்கள். எத்தனையோ வசதியான மக்கள் ஏழைமக்களாகி, வறுமையில் வாடுகின்றார்கள். எத்தையோ சிறார்கள் ஒரு நேர உணவு கூட கிடைக்காமல் தவிக்கிறார்கள். எத்தனையோ மாணவர்கள் பசியுடன் பாடசாலை போய்வருகிறார்கள்.

இப்படியாக நிலைமை இருக்கும் போது, குறிப்பிட்ட செய்தியை கேளவியுற்று மிகவும் மனவேதனை யாகவுள்ளது. மிகவும் கவலையாகவுள்ளது.

ஏன் ஒரு சில மனிதர்கள் மனிததன்மை, நல்ல மனநிலை இல்லாமல் மற்றவர்களின் துன்பங்களில், கஷ்டங்களில் இன்பம் காண நினைக்கிறார்கள்?

மனிதநேயன்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com