Friday, May 7, 2010

கிளிநொச்சியின் ஒவ்வொரு பிரதேங்களிலும் இராணுவ முகாம்கள் நிறுவப்படும். கோத்தபாய

2009 ஜனவரி 2ஆம் திகதி கிளிநொச்சி நகரம் படையினரால் மீட்கப்பட்டதை நினைவுகூரும் முகமாக கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை நேற்று திறந்து வைத்துப்பேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டோம் எனவம் இப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் இராணுவ முகாம்களை அமைக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், கிளிநொச்சியை வென்றது போன்று மக்கள் மனங்களை வெல்வதும் எமது பாரிய பொறுப்பாகும். முப்படை யினரின் பங்களிப்புடன் வடபகுதி மக்களின் நலன்களை பேண பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் முக்கிய இடமாக கிளிநொச்சி நகரம் காணப்பட்டது. கிளிநொச்சி நகரை வீழ்த்த முடியாதென புலிகளும் பாதுகாப்பு ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக கூறிவந்தனர்.

ஆனால், எமது பாதுகாப்புப் படையினர் கிளிநொச்சியை மீட்டது மட்டுமன்றி புலிகளின் பிடியில் சிக்கியிருந்த அப்பாவி மக்களையும் அவர்களின் உடமைகள், உயிர்கள் என்பவற்றையும் மீட்டது மிகப் பெரும் வெற்றியாகும். வடபகுதி மக்களின் நலன்களை பாதுகாக்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் வேண்டிய பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com