கடத்தப்பட்ட 2 ½ வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
களனி விகாரையின் உற்சவத்திற்காக இம்புல்கொட பிரதேச்தில் இருந்து வந்திருந்த 2 ½ வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டிருந்தார். இச்சிறுமி சற்று முன்னர் மாறவில பிரதேச்தில் வலுவத்தை எனும் மிடத்திலுள்ள வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி கடத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக செயலில் இறங்கிய பொலிஸார் சோதனைச் சாவடிகளை அமைத்து தேடுதல்களை நடாத்தியதுடன், பிரதேசங்களை சுற்றிவளைத்து வீடுவிடாகவும் சோதனையிட ஆரம்பித்ததை தொடர்ந்து கடத்தல் காரர்கள் குழந்தையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
0 comments :
Post a Comment