Friday, April 30, 2010

மாரடைப்பைக் குணப்படுத்தும் ஸ்டெம் செல்கள்

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் இரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தச் செல்கள் அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்பவெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நபருக்குக் குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது இந்த “ஸ்டெம்” செல்கள் மூலம் குணப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையின் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் “ஸ்டெம்” செல்கள் குணப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள பிரிஷ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இது பற்றிய ஆய்வை மேற்கொண்டனர்.

“ஸ்டெம்” செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்திய ஒரு நாளில் அவை இரத்தக் குழாயில் உள்ள கோளாறுகளைச் சரி செய்து குணப்படுத்துவது தெரிய வந்துள்ளது.

மேலும் இருதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இது பெருமளவில் உதவி கரமாக இருந்தது. இந்த ஆய்வின் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான இருதய நோயாளிகள் குணமடைந்து நீண்ட நாள் வாழ்வார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com