Monday, April 19, 2010

ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்று : நாளை தொடர்கிறது.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்றின் விசாரணைகள் இன்று காலை 9.30 மணியளவில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. விசாரணைகளின் போது ஜெனரல் சில உபகரணங்களை ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு மாறாக கொள்வனவு செய்துள்ளதான குற்றச்சாட்டு மீது விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. ஜெனரல் சார்பாக ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்தின, இராணுவ நீதிமன்ற விசாரைணை மீதான பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன் இராணுவச் சட்டதிட்டத்தின்படி இராணுவத்தளபதி இராணுவ சட்டத்தினுள் அடக்கப்படவில்லை என்ற வாதத்தைதையும் இராணுத்திலிருந்த வெளியேறிய ஒருவரை ஆறுமாத காலத்தின் பின்னர் இராணுவ நீதிமன்றுக்கு கொண்டுவரமுடியாது எனவும், அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலயங்களுள் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவேண்டும் என்கின்ற வாதங்களை முன்வதை;துள்ளார். அத்துடன் ஜெனரலுக்கு 1 மாதம் கடந்தே குற்றபத்திரிகை வழங்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

விசாரைணகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com