Sunday, April 4, 2010

இலங்கையில் ஓர் இனம்மட்டும் வழ்ந்ததாகக் கூறுவதற்கு தக்க ஆதாரமேதுமில்லை.

உலக நாடுகளிடையே காணப்படும் வரலாற்றுப் பெறு மதியுடைய தொன்மையான தொல்லியல், பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு நிதியுதவி அளித்து வரும் யுனஸ்கோ நிறுவனம் இலங்கையில் உள்ள எழு இடங் களை உலகத் தொல்லியற் சுற்றுலா மையங்களாக அடையாளம் கண்டு அவற்றைப் பராமரித்து வருகிறது. அவற்றின் தொடர்ச்சியாகத் தமிழர் பிராந்தியங்களில் உள்ள தொல்லியல், பண்பாட்டு மையங்களைப் பராமரிக்கும் நோக்கில் இலங்கைக் கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய கலாசாரநிதி நிறுவத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சுதர்சன் செனிவரட்னா அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினருடன் இணைந்து இரு நாள் கருத்தரங்கினை நடத்தியுள்ளார்.

கடந்த மாதம் 17ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தலைமையில் நடந்த கருத்தரங்கில் தனது யாழ்ப்பாண வருகையின் அடையாளமாகப் பொலநறுவையில் கிடைத்த விநாயகர் சிலையின் மாதிரிவடிவத்தை பல்கலைக்கழகத்திற்கு வழங்கி உரைநிகழ்த்தும் போது பல்லினப் பண்பாடு கொண்ட எமது நாட்டில் குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது குறிப்பிட்ட ஒரு மொழி பேசிய மக்கள் மட்டும் வாழ்ந்ததாகக் கூறுவதற்கு ஆதாரமில்லை. இங்கு பௌத்த கலாச்சாரத்திற்குத் தொன்மையான வரலாறு இருப்பது போல் இந்து கலாசாரத்திற்கும் தொன்மையான வரலாறு உண்டு. இதற்கு வரலாற்று ஏடுகளில் காணப்படும் ஐந்து பழமை வாய்ந்த சிவதேவாலயங்களே சான்றாக உள்ளன.

கல்வியறிவு மிக்க யாழ்ப்பாணத்தில் பெறுமதிமிக்க இயற்கைக் கனிமங்களும், தொன்மைமிக்க பண்பாட்டுச் சின்னங்களும் இருப்பதை நாம் அறிவோம். கடந்த காலங்களில் தென்னிலங்கையில் நாம் மேற்கொண்ட தொல்லியற் பணிகளால் பல பண்பாட்டு மையங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாத்து வருகிறோம். அதற்கு வேண்டிய நிதியினை யுனஸ்கோ நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனால் அப்பணிகளையெல்லாம் கடந்த காலங்களில் வடஇலங்கையில் மேற்கொள்ள முடிய வில்லை.

எதிர்காலத்தில் இப்பணிகளை உங்கள் பல் கலைக்கழக வரலாற்றுத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். எமது பூர்வீக மக்களது தொல்லியல் மையங்களையும், பண்பாட்டுச் சின்னங்களையும் அழிந்து போகாது பாதுகாக்க நாம் அனை வரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அது நாம் எமது சந்ததியினருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்|| என்றார்.

இக்கருத்தரங்கில் அறிமுகவுரை நிகழ்த்திய வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம். ~~தென்னாசியாவின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களில் பேராசிரியர் சுதர்சன் செனிவரட்ணாவும் ஒருவர். பேராசிரியர் செம்பகலட்சுமி, பேராசிரியர் கைலாசபதி ஆகியோருக்குப் பின்னர் தமிழக, இலங்கை வரலாற்றிற்கு அதிலும் குறிப்பாக பண்டைய அரச உருவாக்கம் பற்றிய அவரது கருத்துக்களும், முடிவுகளும் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டவை. இலங்கை மக்களிடம் கலாசார ஐக்கியம், பண்பாட்டு ஒருமைத்தன்மையை உருவாக்க தனது தொல் லியற் கண்டுபிடிப்புக்களை விருப்பு வெறுப்பின்றி வெளியிட்டு வரும் இலங்கை அறிஞர்களில் அவரும் ஒருவர். அவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று எமது பல்கலைக்கழகம் வந்து கருத்துரை வழங்குவது எமக்குப் பெருமையளிக்கிறது.

எதிர்காலத்தில் மத்திய கலாசார நிதிநிறுவனம் வடஇலங்கையில் உள்ள தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்களைக் கண்டறிந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க இருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அப்பணிகளை முன்னெடுக்க எமது துறை மாணவர்களும், ஆசிரியர்களும் ஏனையோரும் முழுமையாகப் பங்கெடுப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமில்லை|| என்றார்.

அடுத்தநாள் 18ஆம் திகதி விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் ஆர்.குமாரவடிவேல் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் ஒழுங்குபடுத்திய கருத்தரங்கிற்கு அதன் தலைவர் திருமதி கலாநிதி குகநாதன் தலைமை தாங்கினார். அதில் ~வெசகிரித் தொல்லியல் ஆய்வும் விஞ்ஞானமும்| என்ற தலைப்பில் விரிவான கருத் துரையை வழங்கிய பேராசிரியர் சுதர்சன் செனிவரட்ணா ~~தொல்லியல் சார்ந்த கருத்தரங்கொன்றில் விஞ்ஞான பீட ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் பெருமளவில் கலந்து கொண்டதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டதுடன் அவர் சமகாலத்தில் எமது பேராதனைப் பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்கள் விஞ்ஞானம் சார்ந்த பல பாட அலகுகளை தமது கல்வித்திட்டத்தில் இணைத்து கல்வி கற்றுவருவதனால் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களும், ஊதியமும் பெருமளவு அதி கரித்து வருகிறது|| எனக் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் வெசகிரியில் நாம் வெளிநாட்டு அறிஞர்களுடன் இணைந்து மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் முழுமையாக வெற்றி பெறுவதற்கு பேராதனைப் பல்கலைக்கழப் பொறியியல், மருத்துவ, விவசாய, விஞ்ஞான பீடங்களின் ஒத்துழைப்பே முக்கிய காரணமாகும். அதேபோல் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மும், ஏனைய பீடங்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல், மாணவர்களுக்கு தொல்லியலுடன் இணைந்த விஞ்ஞான அறிவை வழங்க முன்வர வேண்டும். அவை எதிர்காலத்தில் நாம் மேற்கொள்ள இருக்கும் தொல்லியல் ஆய்வுகளுக்கும், பண்பாட்டுச் சின்னங்களைப்
பாதுகாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

அன்றையதினம் பல்கலைக்கழக நூலககேட்போர் கூடத்தில் பேராசிரியர் கிருஷ்ணராஜா தலைமையில் நடை பெற்ற முழுநாள் வேலைப்பட்டறையில் யுனஸ்கோ நிறுவன அனுரசனையுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்லியல் மையங்களைக் கண்டறிதல், அவற்றைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புக்கள் தொடர்பான பயிற்சியை கலாநிதி சோமதேவ, கலாநிதி. நிலான் கூரோ ஆகியோர் வழங்கினர். இதில் தொல்லியல், வரலாற்று மாணவர்களுடன் ஏனைய துறை மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கு கொண்டு பயன்பெற்றனர்.

மூன்றாம் நாளான 19ஆம் திகதி காலை வரலாற்றுத் துறை விரிவுரை மண்டபத்தில் பேராசிரியர் சுதர்சன் செனி வரட்னா ஏற்பாட்டில் தொல்லியல், வரலாற்றுத்துறை மாணவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதில் சிகிரியாத் தொல்லியல் ஆய்வில் பங்கெடுக்கவுள்ள தொல்லியல் மாணவர்கள் தமக்குரிய தேவைகள் குறித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றைச் சாதகமாகப் பரிசீலிப்பதாகக் கூறிய பேராசிரியர் எதிர்காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொள் ளப்படும் தொல்லியல் ஆய்வுகளில் தமது மத்திய கலாசார நிதி நிறுவன உதவிகள் பெருமளவில் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கலைப்பீடாதிபதி ந.ஞானக்குமார் பல ஆண்டுகளுக் குப் பின்னர் தென்னிலங்கையில் இருந்து ஒரு தொல்லியல் அறிஞர் பல்கலைக்கழகம் வந்திருப்பது வடக்கு தெற்கு கல்விசார் உறவுகளுக்கு ஒரு தொடக்கப்புள்ளி எனக் குறிப்பிட்டு எதிர்காலத்தில் இவ்வாறான தொடர்புகளுக்கு கலைப்பீடம் உதவியளிக்கும் எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் எதிர்காலத்தில் எமது தொல்லியல் மாணவர்கள் தென்னிலங்கை மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு பல்கலைக் கழகம் இயன்ற உதவிகளை வழங்கத் தான் துணையாக இருக்கப் போவதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரி யர் புஷ்பரட்ணம் மற்றும் பேராசிரிய கிருஷ்ணராஜா உட்பட பலரும் கருத்துரை வழங்கினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com