Wednesday, April 21, 2010

கிளிநொச்சி கிழக்கில் முதற்தடவையாக மீள் குடியேற்றம்.

மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முகமாக கிளிநொச்சி கிழக்குக்கான மீள்குடியேற்றப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முதற்தடவையாக கிளிநொச்சி கிழக்கில் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

மோதல்களின்போது இடம்பெயர்ந்தவர்கள் இதுவரை கிளிநொச்சி மேற்கிலேயே குடியமர்த்தப்பட்டு வந்ததடன் தற்போது கிழக்கில் குடியேற்றப்படவுள்ளனா்.தற்போது அப்பகுதியில் திருவையாறு. கனகாம்பிகை குளம். ரத்தினபுரம் மற்றும் மருத நகர் ஆகிய இடங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் கிளிநொச்சி கிழக்கைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஒரு வார காலப்பகுயினுள் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவரெனக் கூறிய அரச அதிபர் ஏனைய பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com