Tuesday, March 23, 2010

இலங்கையில் ஐ.நா நிபுணர் குழு அமைத்தால் சீனா- ரஸ்யா வீட்டோவை பயன்படுத்துமாம்.

பான் கீ மூன் அமைக்கும் நிபுணர்கள் குழுவுக்கு எதிராக சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மீதான போர்க் குற்றங்களை ஆராய ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்த இரு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றன.பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக பான் கி மூன் அமைக்க உள்ள இந்தக் குழு தொடர்பான விடயத்தில், இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதென்று ரஷ்ய பிரதமர் விளடீமிர் புடின் மற்றும் சீன தலைவர்கள் தெரிவித்துள்ளதாக இரு நாட்டின் அரசாங்க உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பான் கீ மூன், நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சமர்பித்தால், சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தடுக்கும் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com