Saturday, March 6, 2010

நித்தியானந்தாவுக்கு எதிராக திரும்ப ரஞ்சிதா மறுப்பு?

நித்யானந்தா ஆசிரமத்தில் கனடா பெண் சீடர் கொலை: லெனின் கருப்பன் புகார்
ரஞ்சிதா தற்கொலை முயன்றாரா?
நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா
நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக புகார் அளிக்கவோ, அவருக்கு எதிராக திரும்பவோ முடியாது என்று நடிகை ரஞ்சிதா கூறி விட்டதாக அவருக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது. நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோ காட்சி போலியானது, அது கிராபிக்ஸ் வேலை என்று நித்தியானந்தா பீடத்தின் பி.ஆர்.ஓ. நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார். மேலும், சாமியாருக்கு எதிராக புகார் அளிக்குமாறு ரஞ்சிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் ரஞ்சிதாவோ, சாமியாருக்கு எதிராக புகார் தரவோ, எதிராக செயல்படவோ முடியாது என்று உறுதிபடக் கூறி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் ரஞ்சிதா புகார் கொடுத்தால் மட்டுமே சாமியார் மீது நடவடிக்கை எடுக்க உறுதியான வாய்ப்புகள் உண்டு. எனவே ரஞ்சிதாவை சாமியாருக்கு எதிராக திருப்ப சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் பிடியில் சிக்காமல் ரஞ்சிதா நழுவி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஞ்சிதா எப்படி நித்தியானந்தாவுடன் இணைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கை மகளான நடிகை ராக சுதாதான், ரஞ்சிதாவை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தாராம். கணவருடன் ஏற்பட்ட பிரிவால் மனம் உடைந்து போயிருந்த ரஞ்சிதாவை, ராக சுதாதான், பெங்களூர் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய் ஆறுதல் அளித்துள்ளார்.

ஆசிரம சூழல் ரஞ்சிதாவுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது. இதையடுத்து அங்கேயே தங்கியிருந்துள்ளார். அங்கு பல மணி நேரம் தியானம் செய்வாராம். யோகா குறித்த ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தாராம்.

மேலும் நித்தியானந்தர் மீது வைத்திருந்த மதிப்பு காரணமாக அவரது அறையைக் கூட ரஞ்சிதாதான் சுத்தம் செய்வாராம். அப்போதுதான் நித்தியானந்தாவுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டு விட்டதாம்.

இந்த சமயத்தில்தான் உள்ளடி வேலையில் இறங்கியுள்ளது ஆசிரமத்திலேயே இருந்து வந்த நித்தியானந்தா எதிர்ப்பு கோஷ்டி. இவர்கள் செய்த சதியில்தான் ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் மாட்டிக் கொண்டு விட்டதாக கூறுகிறார்கள்.

இன்னொரு விஷயமும் இதேபோல உலா வருகிறது. மிகக் குறுகிய காலத்தில் உலகப் புகழ் பெற்றவர் நித்தியானந்தா. 32 வயதிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம் அமைத்து உலகம் முழுவதும் மடத்துக்கு 1500 கிளைகள் உருவாக்கிய நித்யானந்தா மீது வேறு சில மடங்களின் சாமியார்களுக்கு பொறாமை இருந்ததாம்.

அவர்களும், இந்த எதிர்ப்புக் கோஷ்டியைத் தூண்டி விட்டு, நித்தியானந்தாவை வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள். இப்படி பல முனைகளிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகள், பொறாமைகள் உள்ளிட்டவை சேர்ந்துதான் நித்தியானந்தாவை, இன்று ரஞ்சிதா மூலம் வீழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.

ரஞ்சிதா தற்கொலை முயன்றாரா?
சாமியாருடன் உல்லாசமாக இருந்த ஆபாசப் படங்கள் வெளியாகிவிட்டதால், அந்த அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்றார் நடிகை ரஞ்சிதா என அவருக்கு ஆதரவான சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர். பிரம்மச்சாரி மற்றும் பரமஹம்ஸ என்று தன்னைக் கூறிக்கொண்ட சாமியார் நித்யானந்தமும், நடிகை ரஞ்சிதாவும் செக்ஸ் உறவு கொண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியாகி உலகை அதிர வைத்தன.

இரண்டு நாள் அமைதி காத்த சாமியார் தரப்பு, பின்னர் இது போலியான வீடியோ என்றது.

ஆனால் சாமியாரிடமும் விசாரித்துவிட்டே இந்த வீடியோவை ஒளிபரப்பியதாக சன் தொலைக்காட்சி நேற்று அறிவித்தது. போலி வீடியோ என்று நித்யானந்தா தரப்பு மறுத்தாலும், அதை நிரூபிக்க தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டனர்.

இந் நிலையில் பிரச்சனையின் மையப்புள்ளியான ரஞ்சிதா இருக்கும் இடம் தெரியவில்லை. அவரது வீடு பூட்டிக் கிடக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள தனது நெருங்கிய தோழியின் வீட்டில் அவர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஞ்சிதாவை போலீசார் விசாரணை நடத்துவதற்காக தேடுகிறார்கள். ராவண் படத்துக்கு டப்பிங் பேச மணிரத்னமும் அவரது யூனிட்டாரும் கூடத் தேடுகிறார்கள்.

ரஞ்சிதாவுக்கு உதவ நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகளும் தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் ரஞ்சிதாவின் கணவர் ராகேஷ் மேனன் குடும்பத்தினரும் அவமானத்தால் நொறுங்கி போய் உள்ளனராம். ராகேஷ் மேனன் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இருவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. கணவருடன் இருப்பதாகவே ரஞ்சிதாவும் கூறிவந்தார். ஆனால் தனியாகவே வசித்து வந்தார்.

தானும் சாமியாரும் உள்ள ஆபாசக் காட்சிகள் வெளியானதால் ரஞ்சிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சிலர் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், சில தினங்களாக ரஞ்சிதா பற்றி வெளியாகும் செய்திகளின் தீவிரத்தைத் தணிப்பதற்காகவும், ரஞ்சிதாவைத் தேடும் போலீசாரின் வேகத்தை மட்டுப்படுத்தவும் இந்த 'தற்கொலை முயற்சி' செய்தியை அவருக்கு வேண்டிய சிலர் பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

நித்யானந்தா ஆசிரமத்தில் கனடா பெண் சீடர் கொலை: லெனின் கருப்பன் புகார்
பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் சீடர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்ற நித்ய தர்மானந்தா புகார் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோவை ரகசியமாக எடுத்த இவர் இன்று சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன் முன் தஞ்சம் அடைந்தார். அப்போது நித்யானந்தா-ரஞ்சிதா முழு லீலைகள் அடங்கிய வீடியோ சிடியை கமிஷ்னரிடம் தந்தார்.

பின்னர் அவர் அளித்த புகாரில், ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா சீரழித்துள்ளதாகவும், ஒரு கனடா நாட்டுப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

அவரால் கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட சிலர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் நித்யானந்தாவிடம் சீடர்கள் ஏமாறுவதைத் தடுக்கவே இந்த வீடியோவை எடு்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வழக்குகள் பெங்களூருக்கு மாற்றம்:

இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், லெனின் கொடுத்த புகாரின்பேரில் சாமியார் நித்யானந்தா மத உணர்வை துன்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல், மிரட்டல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் மனுவுடன் லெனின் நித்யானந்தரின் படுக்கை அறை காட்சிகள் அடங்கிய சி.டி. ஒன்றையும் கொடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ளதால் வழக்குகள் அனைத்தும் அந்த மாநில போலீசாருக்கு மாற்றப்படும். இதற்கான ஏற்பாடுகள் தமிழக டிஜிபி மூலம் நடந்து வருகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக கர்நாடக போலீசாருக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் தமிழக போலீசார் செய்வார்கள் என்றார்.

பர்மா பஜாரில் ரஞ்சிதா-நித்யானந்தா சி.டிக்கள் அதிகமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, 'அப்படியா' என்றார் கமிஷ்னர். லெனின் தந்துள்ள சாமியாரின் சி.டி. எவ்வளவு நேரம் ஓடுகிறது என்று கேட்டதற்கு, நான் சி.டி.யை பார்க்கவில்லை என்றார். அப்போது அருகில் இருந்த துணைக் கமிஷனர் ஸ்ரீதர் கூறுகையில், இந்த சிடி இரண்டரை மணி நேரம் ஓடுகிறது என்றார்.

சாமியாருடன் படுக்கை அறையில் இருப்பது நடிகை ரஞ்சிதா தானா என்று கேட்டதற்கு, ஆம் அவர் ரஞ்சிதா தான், அவர் எங்கே இருக்கிறார் என்று விசாரித்து வருகிறோம் என்றார் கமிஷ்னர்.

நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா
எந்த ஆசிரமத்துக்கும் நான் இதுவரை போனதில்லை, சாமியார்களை நம்புவதுமில்லை... கடவுளை மட்டுமே நம்புவேன்'' என்று நடிகை திரிஷா கூறினார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சிலம்பரசன், திரிஷா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் நிருபர்களுக்கு த்ரிஷா அளித்த பேட்டி:

சில நடிகைகள் ஆசிரமத்துக்கு சென்று சாமியாரிடம் ஆசி பெற்று வருகிறார்களே? நீங்கள் எந்த ஆசிரமத்துக்காவது சென்றிருக்கிறீர்களா?

அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஆசிரமங்களுக்கு நான் போனதில்லை. இனிமேல் நான் போகமாட்டேன். நான் சாமியைத்தான் நம்புவேன், சாமியார்களை நம்புவதில்லை. கடவுளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதெப்படி ஒரு சாதாரண மனிதன் கடவுளாக முடியும்... மனிதர்களை கடவுளாக நினைத்து காலில் விழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com