Tuesday, March 30, 2010

மாஹாத்மா காந்தியின் செருப்பு ஏலம்

இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைவர் மாஹாத்மா காந்தி பயன்படுத்திய அவரது சில உடைமைகள் அமெரிக்காவில் பெரும் பரபரப்புக்கும் சர்ச்சைக்கும் இடையில் 18 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது.

இந்த ஏலத்தை கடைசி நேரத்தில் நிறுத்த அதன் விற்பனையாளர் முயன்றிருந்தார். ஆனாலும் ஏலம் திட்டமிட்டபடி நடந்தது. காந்தியின் பொருட்களை வாங்கியிருப்பவர் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தப் பொருட்களை மீண்டும் இந்தியா கொண்டுவர இவர் திட்டமிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் தனிப்பட்ட உடமைகள் சிலவற்றை வைத்திருக்கும் அமெரிக்க ஏல நிறுவனம் இன்று அந்தப் பொருட்களை ஏலத்தில் விடுவதை நிறுத்த இந்திய அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. காந்தியின் அவ்வுடமைகளை வைத்திருக்கக்கூடிய ஜேம்ஸ் ஓடிஸ் ஏலம் நிறுத்தப்பட வேண்டுமானால் இந்திய அரசு வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கென ஒதுக்கும் நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார். அவரது நிபந்தனைகளை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில் ஏலம் தொடர்ந்து நடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா காந்தியடிகளின் கொள்கையைப் பின்பற்றாமல் அவரது நினைவுக்கு மட்டும் உரிமை கோருகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு இத்தருனத்தில் எழுந்துள்ளது.

மஹாத்மா காந்தி அவர்களை தேசப்பிதா என்று வர்ணித்து தேசத்தின் மதிப்புகுரிய தலைவராக அவரை முன்னிருத்தும் இந்தியா அவரது கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை விற்பனையாளரான ஜேம்ஸ் ஓட்டிஸின் நிபந்தனைகள் மறைமுகமாக குறிப்புணர்த்துகின்றன என்று கூறப்படுவது குறித்து மதுரையில் அஹிம்சை மற்றும் அமைதிக்கான சர்வதேச காந்தியக் கழகம் என்ற அமைப்பின் இயக்குநராக இருக்கும் டாக்டர் எஸ். ஜெயப்பிரகாசம் தெரிவித்தார்.

Thanks Thinakaran

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com