Friday, March 26, 2010

பிரபாகரன் கொல்லப்பட்டு 9 மாதங்களானாலும் கைதுகள் நிறுத்தப்படவில்லை.

9 மாதங்களின் பின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் (சி.பி.ஐ.) தமது இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் காணப்பட்ட பிரபாகரனின் பெயரை நீக்கியிருந்தாலும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் பணம் சேகரித்தவர்களின் கைதுகளின் தொடரில் யேர்மனியில் Tamil Coordinating Committee (TCC) என்ற அமைப்பின் பெயரால் 2002 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கென பணம் சேகரித்ததற்ககாவும், ஓர் ஆயுத களவாடலிற்காகவும் 61 வயதான ஒருவர் யேர்மனிய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

T.M என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர்மீது, அகதியாக புலம் பெயர்ந்து மேற்கு யேர்மனியின் city of Wuppertal என்னுமிடத்தில் வசித்து வந்த ஈழத் தமிழ் குடும்பமொன்றிடம் 2002 ம் ஆண்டளவில் தமக்கு மாதாந்த கொடுப்பனவு தருமாறு துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவரின் கைது சிலநாட்களுக்கு முன் Oberhausen near Essen இல் கைது செய்யப்பட்ட ஆறு பேரின் தொடர்சியான கைதென அறியப்படுகிறது. 60,000 தமிழர்கள் வசிக்கும் யேர்மனியில் இரண்டு தமிழ் தொலைக்காட்சி சேவைகளும், பதினோரு வானொலி சேவைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com