Saturday, March 20, 2010

யாழ் - கண்டி ஏ - 9 வீதியில் வாகன விபத்து; 9 பேர் காயம்.

ஏ - 9 வீதியில் அமைந்துள்ள சாவகச்சேரிப் பகுதியில் இன்று காலை 6 மணியளவில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வானும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஒன்று ஏற்பட்டிருப்பட்டுள்ளதாகவும், இவ்வாகன விபத்தில் 9 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com