Wednesday, February 3, 2010

ஜீரிவி பார்ப்பவர்கள் துரோகிகள் : நெடியவன் குழு அறிவிப்பு.

பிரித்தானியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா என புலிகளினால் தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டது. குறிப்பிட்ட தேர்தலில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் 99 வீதமானோர் வாக்களித்துள்ளதாக புலிகள் சார்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றபோதும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தேர்தலில் 10 விழுக்காடு தமிழ் மக்கள் கூட கலந்து கொள்ளவில்லை என்பதுவே உண்மை.

புலிகள் இயக்கம் பல குறுங்குழுக்களாகவும் இரு பெருங்குழுவாகவும் பிரிந்து நிற்கின்றது. இதில் கே.பி யின் வழியில் ருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழம் எனவும் கேபியின் எதிராளியான நெடியவன் வட்டுக்கோட்டை தீர்மானம் எனவும் மக்கள் காதுகளில் பூச்சுத்த முனைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜீரிவி ருத்திரகுமாரன் பக்கமே சாய்ந்துள்ளது. 10 விழுக்காட்டு மக்கள் கூட வாக்களிக்காத நிலையில், ஜீரிவி தேர்தல் முடிவுகள் தொடர்பாக வெளியிட்ட செய்தியில் 35 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்திருந்தனர்.

வட்டுக்கோட்டையாக இருந்தால் என்ன நாடுகடந்த தமிழீழமாக இருந்தால் என்ன தமிழ் மக்கள் புலிகளின் எந்த புளுடாவையும் நம்ப தயாராக இல்லாத நிலையில் தேர்தலில் மக்கள் வாக்களிக்க செல்லதாதற்கு ஜீரிவி போன்ற ஊது குழல்கள் பிரச்சாரம் செய்யாததே காரணம் என குற்றஞ்சாட்டும் நெடியவன் குழு, தேர்தலில் 35 விழுக்காடு மக்களே வாக்களித்தாக செய்தி வாசித்தி என்.ரி ஜெகனை துரோகி என அறிவித்துள்ளதுடன் எவரும் ஜிரிவியை பார்வையிட வேண்டாம் என லண்டனில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.

இலங்கையில் இயங்கிவந்த பயங்கரவாத குழுவான புலிகளியக்கம் ஒழிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் தேசத்தில் புலிகளின் பெயரால் வயிறு வழர்த்து வந்தவர்களிடையே பல பிளவுகள் உண்டாகி உள்ளது என்பதை மாற்று ஊடகங்கள் தெரிவித்திருந்தபோதும் நம்பியிராத மக்கள் தற்போது தாம் வேதவாக்காக நம்பியிருந்த புலி ஊது குழல்கள் ஊடாகவே அங்கு ஏற்பட்டுள்ள பிளவுகளை கேட்டு உணரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com