Saturday, February 6, 2010

வடமாகாண பாராளுமன்ற பிரதிநித்துவ எண்ணிக்கைக்கு ஆப்பு.

எதிர்வரும் பொது தேர்தலுக்கு முன்னர் வட மாகாணத்தில் குடிசன மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க வேண்டியுள்ளார். 1988 ம் ஆண்டிற்கு பின்னர் வட மாகாணத்தில் குடிசன மதிப்பீடு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் காலவதியான வாக்காளர் இடாப்பின் அடிப்படையிலேயே தேர்தல் அலுவல்கள் யாவும் இடம்பெறுவதாகவும் , யாழ் குடாநாட்டில் தற்போது வாழும் மக்களின் எண்ணிக்கையை அறியும் பொருட்டு எவ்வித தாமதங்களும் இன்று குடிசன மதிப்பீடு நடாத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள வாக்காளர் இடாப்பில் உள்ள மக்கள் எண்ணிக்கையிலும் பார்க்க யாழ் மாவட்டத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவானது எனவும், நாட்டில் இருந்து பெருந்தொகையான மக்கள் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களில் இந்தியாவில் உள்ளவர்களின் எண்ணிக்கையை இந்தியா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளதாகவும், ஏனைய நாடுகளில் உள்ளோரின் எண்ணிக்கை தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு குடிசன மதிப்பீடு நடாத்தப்பட்டால் வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சரி அரைவாசியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நடைமுறையிலுள்ள வாக்காளர் இடாப்பின் எண்ணிக்கைக்கு அமைய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளதுடன், ஈபிடிபி ஒரு ஆசனத்தை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com