Thursday, January 28, 2010

இலங்கைத் தேர்தலின் லட்சணம். தேர்தல் ஆணையாளரின் பேச்சிலிருந்து எடுக்கப்பட்டவை.

இலங்கையின் அதிஆட்சேபனைக்கு இடமளித்ததும் வெறுக்கத் தக்கதுமான 6 வது ஜனாதிபதித் தேர்தல் 27 ந்தேதி மாலை பலகேள்விகளை விட்டதோடு முடிவுக்கு வந்தது. எதிர்பார்த்தபடி கடைசி முடிவு உணர்ச்சிவசப்பட்டு தேர்தல் ஆணையாளரினால் வெளியிடப்பட்டது. ஆணையாளர் அந்தச் சம்பவத்தில் ஆய்வாளர்கள் கூறியாங்கு ஒரு சண்டை சச்சரவுகள் நிறைந்த தேர்தலை நடாத்துவதிலுள்ள இடர்பாடுகள் பற்றி ஓர் அர்த்தமுள்ளதும் கிரகிப்பதற்கு அருவருப்பானதுமான சொற்பொழிவை வழங்கினார்.

பல கண்காணிப்பாளர்கள் எதிர்பார்த்தபடியே அந்தச் சொற்பொழிவானது சட்டவிரோதமாக ஒருவனை வேலைசெய்ய நிர்ப்பந்தித்ததாலும் அங்கே பலதளங்களிலும் தேர்தல் பற்றியும் தேர்தல் முடிவை அறிவிப்பதிலும் ஒரு கொள்ளை படுபயங்கரமான முரண்பாடுகள் இருந்ததாலும் ஏற்பட்டதாகும்.

அவர் சுட்டடிக்காட்டிய சில விடயங்கள் பின்வருமாறு.
'அரசியல்சாசனத்தின் 17 வது திருத்தப்பிரகாரம் தந்த அதிகாரத்தின்படி நான் சில வரையறைகளை அரச ஊடகங்களுக்கு ஏற்படுத்தியிருந்தேன். அவையெல்லாம் உதாசீனப்படுத்தப் பட்டன. அதன் பின்பு அரச ஊடகங்களை வழி நடாத்துவதற்கென்று ஒரு பொறுப்பதிகாரியை நியமித்தேன். அவர் பூரணமாக உதாசீனப் படுத்தப் பட்டார். அரச ஊடகங்களின் தலைவர்களோடு கலந்துரையாடிப் பார்த்தேன். அதனாலும் பலன் ஏதும் ஏற்படவில்லை. ஈற்றில் இது ஓர் அர்த்தமற்ற வேலையென்பதை உணர்ந்து பொறுப்பதிகாரியையும் மீள எடுத்துக் கொண்டேன்'

'பல அரச ஸ்தாபனங்கள் அரச ஸ்தாபனங்கள்போல் தேர்தற்காலத்தில் நடக்கவில்லை என்பதைக் கண்டுகொண்டேன்.'

' எனது வேலை வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பதும் தேர்தல் வாக்குச் சீட்டுகளைச் சரியாக எண்ணுவதேயொழிய வேறுவிடயங்களில் தலையிடக் கூடாது என்று எனக்குப் பலர் சொன்னார்கள். நான் இன்று முகங்கொடுக்கும் சூழலானது என்னால் வாக்குப் பெட்டிகளைக் கூடப் பர்துகாக்க முடியாததுவாகும். எனது வேலையை பெரிய நிர்ப்பந்தத்தின் மத்தியிலும் மனஅழுத்தத்தின் மத்தியிலுமே செய்தேன்.'

'சூழலும் ஆபத்தும் எனது சக்திக்கு அப்பாலேயே சென்றிருந்தது. எனக்கு வயதும் அதிகமாகி விட்டது. இந்த வயதான காலத்தில் தொடர்ந்து 8 வருடங்கள் சேவையாற்றி விட்டேன். ஆதலால் நன்றிகிடைக்காத இந்த வேலையிலிருந்து என்னை விடுவிக்கும்படி கேட்கிறேன்.'

'இப்படியான சூழலில் நிம்மதியாக வேலை செய்ய முடியாது. நான் தொடர்ந்து அழுத்தப்பட்டேன். நான் நோய்வாய்ப்படுவேன்போல் உணர்ந்தேன். அப்படியான நோய்களை அதன் பின்விளைவுகளை எதிர்பார்த்திருந்தேன்.'

பிரதேசத்தைலைவர்கள் எனது பணியாளர்களை ஒடுக்கினார்கள். புத்தளம், அனுராதபுரம், மாத்தளை மாவட்டங்களில் வாக்கு எண்ணுமிடங்களை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. இது ஒரு நல்ல போக்கல்ல. அது கட்டுப்படுத்த முடியாத அவளவுக்கு வளர்ந்து வாக்குச்சாவடித் தலைமைப் பொறுப்பாளர்களையும் உதவித்தேர்தல் ஆணையாளர்களையும் திட்டித்தீர்க்கும் மட்டத்திற்குச் சென்றிருந்தது.'

'என்னுடைய கடமையைச் செய்யும்பொழுது ஒரு கட்சியினருக்கு ஒரவஞ்சகமாக நான் நடப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டேன். இப்படியான மரியாதைக் கேட்டையும் வேதனையையும் என்னால் தொடர்ந்து தாங்கிக் கொள்ள முடியாது. எனது உடல் வலிமையும் உள வலிமையும் அதற்கு இடம் தரமறுக்கிறது.'

தனது மனச்சாட்சி ஏற்காத விதத்திலேயே மிகுந்த நிர்ப்பந்தத்தின் மத்தியிலேயே தான் தேர்தல் முடிவை அறிவித்தேன் என்பதை தெளிவாகத் தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காடியிருக்கிறார்.

ஒரு றப்பர் பந்து தண்ணீருள் அமிழ்த்த அமிழ்த்த அது மீண்டும் மேலே வருகிறதோ அதே போலவே உண்மையானது தனது வழியில் எப்படியோ வந்து சேர்ந்து விடும். உண்மையை நசுக்க நசுக்க அது மீண்டும் மீண்டும் மேலுக்கு வந்துவிடும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com