Tuesday, January 26, 2010

காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களியுங்கள்.

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனை களை பாது காப்பு பிரிவினருக்கு வழங்கியிருப்ப தாகவும் இன்று காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குகளை அளிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை கேட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக் கையில் மேலும் கூறப்பட்டு ள்ளதாவது,

2005 ஆம் ஆண்டு மக்களின் ஆணையை பெற்றுக் கொண்டதையடுத்து இரண்டு வருட பதவிக் காலம் மீதுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முன்வந்தமை ஜன நாயகத்தின் மீது எனக்கு உள்ள நம்பிக்கையை மற்றும் கெளரவத்தின் காரணமாகவேயாகும்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. முறையான தேர்தல் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு உதவுவது ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து பிரஜைகளினதும் கடமையாகும்.

ஜனநாயகத்தை மதிக்கும் மனித உரிமைகளை பாதுகாக்கும் கீர்த்தி மிக்க நாடு என இலங்கை வென்றுள்ள கெளரவத்தை மேலும் பாதுகாப்பதுடன் ஜனநாயகத்தையும் தாய் நாட்டின் கீர்த்தியையும் பாதுகாப்பதற்கு ஐக்கியமாகவும் ஒரு மனதுடனும் ஆர்ப்பாட்டமின்றி நிதானமாக செயற்படுமாறு நான் அனைத்து மக்களிடமும் மிகுந்த வினயத்துடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com