Wednesday, January 13, 2010

ஹெயிட்டியில் கடமை புரியும் படையினருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. உதய நாணயக்கார

ஆயிரக்கணக்கானோர் மாயம்
லத்தின் அமெரிக்காவின் கரீபியன் கடல் பகுதியில் உள்ள ஹெய்தி தீவில் 200 ஆண்டுகளுக்கு பிறகு பயங்கர நிலநடுக்கம் ஒன்று நேற்று பிற்பகல் 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தில் இழப்பு விவரங்கள் இதுவரை சரியாக வெளிவரவில்லை. சர்வதேச உதவி நிறுவனங்கள் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டுவருகின்றது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஜனாதிபதி மாளிகை, ஐ.நா., தூதரகம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளது. போர்ட்-அவ்-பிரின்ஸ் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்று முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி உள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த நூற்றுக்கணக்கான நோயாளிகளின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.

அடுத்தடுத்து 13 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7 புள்ளிகளாக ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இப்பகுதியில் முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.இதனால் இப்பகுதியில் தகவல் தொடர்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. நில நடுக்கத்தில் ஜனாதிபதி மாளிகையின் 60 சதவீத பகுதி சேதமடைந்துள்ளது. அலுவலகங்கள், வீடுகளில் என பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. இதில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கம் குறித்து ஐ.நா., செயலாளர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ஒபாமா ஆறுதல் : ஹெய்தி தீவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ஹெய்தி பகுதி மக்களுக்கு எனது ஆறுதல்களும், பிராத்தனைகளும் உரித்தாகட்டும்; மீட்புப்படைகள், உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளை உடனடியாக வழங்குவதாக வெனின்சுலா வெளியுறவுத்துறை அமைச்சர் நிக்கோலஸ் உறுதி அளித்துள்ளார்; மேலும் 50 பேர் கொண்ட உதவிக் குழு ஒன்றும் ஹெய்தி வர உள்ளது; உலக நாடுகள் அனைத்தும் ஹெட்டி தீவு மக்களுக்கு நிவாரணம் வழங்கும்படி உலகத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஹெயிட்டியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு படையினர் பணி புரிந்துவருகின்றனர். ஆங்கு அமைந்துள்ள ஐ.நா பாதுகாப்பு படையின் கட்டிடம் ஒன்றும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் அதில் ஐ.நா பாதுபாப்பு படையைச் சேர்ந்தோரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்தாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைப் படையினரும் ஹெயிட்டியின் ஐ.நா பாதுகாப்பு படையின் கடமை புரிகின்றனர். அவர்கள் எவருக்கும் இவ்வனர்த்தத்தில் சேதங்கள் எதுவுமில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com