Sunday, January 31, 2010

கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தல் சீர்திருத்தம்

பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் தேர் தல் முறையில் மாற்றம் செய்ய வேண் டியதன் அவசியம் பற்றிய பேச்சு இப்போது எழுந்திருக்கின்றது. பல அரசியல் தலைவர்கள் இதற்குச் சாதகமாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.

தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. முன்னர் நடை முறையிலிருந்த தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையின் மிகப் பெரிய குறைபாடு பெரும்பான்மை அபிப்பிராயம் நிராகரிப்புக்கு உள்ளாவதாகும். ஒரு தொகுதியில் இரண்டுக்குக் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் முதலாவதாகக் கூடுதலான வாக்குகளைப் பெறுபவர் தெரிவு செய்யப்படுவார். மற்றைய வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் வெற்றி பெற்றவரின் வாக்குகளிலும் பார்க்கக் கூடுதலாக இருக்குமேயானால் அது பெரும்பான்மை அபிப்பிராயம் நிராகரிக்கப்படுவதாக அமையும். ஒரு மாவட்டத்திலுள்ள எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்கள் பிரதி நிதித்துவம் பெற முடியாமை இன்னொரு குறைபாடு.

இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக அறிமுகப் படு த்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை முன்னைய திலும் பார்க்க மோசமான குறைபாடுகளைக் கொண்டதாக இருக்கின்றது. மாவட்டம் முழுவதும் ஒரே தொகு தியாக இருப்பதால் வேட்பாளர்கள் பெருந்தொகைப் பணம் செலவிட வேண்டியதாக உள்ளது. விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவ தால் விருப்பு வாக்குக்காக ஒரே கட்சி வேட்பாளர்கள் ஒருவருடன் ஒருவர் மோதும் நிலையைக் கடந்த கால ங்களில் கண்டிருக்கின்றோம்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திலுள்ள குறைபாடுகளையும் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவத்திலுள்ள குறைபாடுகளையும் நீக்கும் வகையானதும் கூடுதலான ஜனநாயகத் தன்மை கொண்டதுமான தேர்தல் முறையொன்றை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையிலான தெரிவுக்குழு சிபார்சு செய்திருக்கின்றது. இச்சிபார்சின் அடிப்படையில் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது தேர்தல்களில் ஜனநாயகத் தன்மை பேணப்படுவதற்குப் பெரிதும் உதவும்.

ஏப்ரல் மாத பிற்பகுதி வரை தற்போதைய பாராளுமன்றத்து க்கு ஆயுட்காலம் உண்டு. எல்லா அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வரும் பட்சத்தில் அடு த்த பொதுத் தேர்தலுக்கு முன் தேர்தல் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் சிரமம் இருக்காது.

தேர்தல் சீர்திருத்தத்துக்கு ஆதரவளிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கூறியதா கப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அகவயக் காரணிகளால் வழி நடத்தப்படா மல் மக்களின் பொதுவான நன்மையையும் ஜனநாயகப் பெறுமானங்களையும் கவனத்தில் எடுத்து அதன் நிலைப் பாட்டை மாற்ற வேண்டும். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாகத் தேர்தல் சீர்திருத்தத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

நன்றி தினகரன்

1 comments :

Niyas January 31, 2010 at 9:41 AM  

ஹாஹா அப்போ சிறுபான்மையினரின் பாராளுமன்ற பிரவேசத்தை குறைப்பதற்காக ஐக்கிய தேசியக் அதன் நிலைப் பாட்டை மாற்ற வேண்டும் என்று சொல்கிறதோ தினகரன்?
அப்போ இனிமேல் பாராளுமன்றில் மௌலனாக்களும்,பல்லாக்களும் பிரவேசிக்கவே முடியாமல் போகும்!

இவர்கள் பாராளுமன்றம் சென்றாலும்,செல்லாவிட்டாலும் சமூகத்துக்கு ஒன்றும் நடக்க போவதில்லை என்பது ஜதார்த்தமாக இருந்தாலும்கூட சமூகத்தின் அமைச்சர்கள் என்கிற அலங்கார பதவிகூட கிடைக்காமல் போகும்.

தமிழில் பிரசுரமாகும் இந்த அரச ஊடகமான தினகரனை தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com