Saturday, December 26, 2009

புதிய அமைச்சுப் பதவிகள் தொடர்பாக அரசின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அதிருப்தி.

"ஜோன்ஸ்டனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வந்தவுடன் அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளீர்கள் , எமக்கு எதைத் தந்துள்ளீர்கள்" என ஜனாதிபதியிடம் அரச தரப்பைச் சேர்ந்தவர் கேள்வி
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசின் பக்கம் தாவிக்கொண்டவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமை தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் உள்ள சிரேஸ் உறுப்பினர்கள் பலர் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறு அதிருப்தி அடைந்துள்ள சுமார் 21 அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருவதுடன் நிலைமைகைளைச் சாமாளிக்கும் பொருட்டு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுடன் பரஸ்பர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்குவதாக பல உறுதிமொழிகளை வழங்கிவருவதாகவும் அவ்வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றில் முக்கிய பொறுப்பொன்றை வகிக்கின்ற அமைச்சர் அல்லாத ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 'ஜோன்ஸ்டன் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வந்தவுடன் அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளீர்கள் , எமக்கு எதைத் தந்துள்ளீர்கள்' என ஜனாதிபதிடம் நேரடியாக கேட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அதேநேரம் தேர்தல் நெருங்கும்போது ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் பாட்டாளம் ஒன்று அங்கிருந்து வெளியேறும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (மக்கள் பிரிவு) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துவருகின்றார்.

அத்துடன் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலர் ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் மஹிந்த சிந்தனையை ஆதரிப்பதான விளக்கத்தின் போதே அவர் இதை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஜோன்சன் பொர்ணாந்து போன்றோருக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டமை தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும் எனவும் தேர்தல் ஒன்று இடம்பெறுகின்றபோது நியமனங்கள் வழங்க முடியாது என்பதற்கு இணங்க இவ்விடயத்தை தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு தாம் இதை கொண்டுவரவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com