அமெரிக்காவில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு ரூ.70 கோடியில் மாளிகை
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் குடுபத்தினர் பயன்படுத்துவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹெட்டன் பகுதியில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டுடன் கூடிய மாளிகை வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபக்சேவின் சகோதரர்கள் கோத்தபய மற்றும் பசில் ஆகியோருக்கு நெருக்கமான முகவர் ஒருவர் மூலம் இந்த வீடு வாங்கப்பட்டுள்ளதாக லங்க இரித பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நியூஜெர்ஸி நகரில் ராஜபக்சே குடும்பத்தினர் மேலும் சில வீடுகளை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அந்த அந்த செய்தி மேலும் தெரிவித்திருக்கிறது.
0 comments :
Post a Comment