Saturday, December 26, 2009

தீபன் உட்பட 600 பேர் சுற்றி வழைக்கப்பட்டு கொல்லப்பட்டமை போரில் திருப்பு முனையானது.

புதுக்குடியிருப்பு கிழக்கே ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை சுற்றிவளைத்து மேற்கொண்ட தாக்கதல் போரின் திருப்புமுனையாக அமைந்தது என்று சிறிலங்கா படையினரின் 58 ஆவது டிவிஷன் தளபதி சவீந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை வெளியாகவுள்ள சண்டே லீடர் பத்திரிகைக்கு சவீந்திர டி சில்வா வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயெ மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

விடுதலைப்புலிகளின் வடமுனை தளபதி தீபன் மற்றும் முக்கிய தளபதிகள் உட்பட சுமார் அறுநூறு விடுதலைப்புலிகள் இந்த முற்றுகை தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பு தாக்குதல் போரின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் சிறிலங்கா இராணுவம் இதுவரை காலமும் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தாக்குதல்களில் மிகப்பெரிய தாக்குதலுமாகும்.

இந்த தாக்குதல் 58 ஆவது டிவிஷன் படையினராலும் 53 ஆவது டிவிஷன் படையினராலும் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிராவிட்டால் போர் மேலும் தொடர்ந்திருக்கும். இந்த தாக்குதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் கொல்லப்பட்டதால், விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தினால் தொடர்ந்து போரை நடத்தமுடியாமல் போய்விட்டது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் எமது படையினர் இடங்களை பிடிப்பதற்கு அறிவுறுத்தப்படவில்லை. நாளாந்தம் பத்து புலிகளை கொல்வதற்கு உத்தரவிடப்பட்டனர். அந்த எண்ணிக்கை பின்னர் 15 ஆக அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பினை அடுத்து போரை இலகுவாக்க முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com