மீள்குடியேற்றப் பகுதிகளில் 53 புதிய தபாலகங்கள்.
தபால் சேவையை மேம்படுத்த 2,135 மில்.ஒதுக்கீடு
வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளில் தபால் சேவையை மீண்டும் ஆரம்பிக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய இந்தப் பகுதிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணிகள் முன்வைக்கப்பட்டு வருவதாகத் தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம்.எஸ்.செல்லச்சாமி தெரிவித்தார்.
இதன்படி ஜனவரி மாதத்திலிருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வட பகுதியில் 53 தபாலகங்கள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாகப் பிரதியமைச்சர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததும், வடக்கில் புதிய தபால் ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வன்னியில் யுத்தத்தின் காரணமாக சேதமான தபாலகங்களைப் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ஏனைய தபாலகங்களில் உள்ள தொலைத்தொடர்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இதேநேரம், தபால் ஊழியர்கள் மூலமாகத் தொலைபேசிப் பாவனை, இணையம் ஆகியவற்றுக்கான முற்கொடுப்பனவு அட்டைகளைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
வடக்கே அடுத்த மூன்றாண்டு திட்டத்தில் தபால் சேவையை மேம்படுத்த 2,135 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment