ஐ.ம.சு முன்னியின் செயலாளர் ஒழுக்கம் தவறியவர் என்கின்றார் ஐ.ம.சு மு வேட்பாளர்.
தென்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களுள் மிகுந்த போட்டி நிலவி வருவதுடன் சகவேட்பாளர்கட்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் தென்மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக நிற்கும் நடிகை அனர்கலி அவர்கட்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக சக வேட்பாளர் நிசாந்த முத்துகெட்டிகம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான நிசாந்த முத்துகெட்டிகம வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய கருத்துக்களால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் நீதிமன்றினால் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நீதிமன்றில் தோன்றிய அவர், தான் நீதிமன்றில் இருந்து வீடு செல்லும் போது வழிமறித்த காலித் துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன்னை மிரட்டியதாக அவர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறிய நிசாந்த முத்துகெட்டிகம, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகவேட்பாளர்கள் ஒரு சிலரால் எனக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் எனக்கு தொந்தரவு செய்கின்றனர். இவ்விடயத்தை ஐனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார் இல்லை. ஏங்களுடன் போட்டியிடுகின்ற சக வேட்பாளரான அனர்கலிக்காக காலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனக்கு துப்பாக்கியை நீட்டுகின்றார். ஆனால் எனக்கு ஜனாதிபதியின் பலம் அவசியம் இல்லை. நான் இங்கிருப்பது மக்களின் பலத்தில். எனக்கு காலி மக்களின் எதிர்பார்புக்களை நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கின்றதே தவிர ஜனாதிபதியின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியதேவை இல்லை. நான் இங்கு மக்களின் தீர்ப்பையே எதிர்பார்த்திருக்கின்றேன். ஜனாதிபதியினால் வழங்கப்படும் அமைச்சுப் பதவிகள் எனக்கு அவசியமற்றவை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர், ஒழுக்கத்தை கடைப்பிடிக்குமாறு வேண்டுகின்றார். ஆனால் அவரிடம் ஒழுக்கம் இல்லாததையிட்டு நான் கவலையடைகின்றேன். நான் இங்கு மக்களுக்கா சேவை செய்கின்றேன். இதுவரை நான் 400 லட்சம் ரூபாக்களைச் செலவிட்டிருக்கின்றேன். அந்த பணத்தை நான் கடன் பட்டுள்ளேன். அது கட்சியின் பணம் அல்ல நான் கஸ்டப்பட்டு உழைத்த பணமும்கூட, இவ்விடயங்கள் கட்சியின் தலைவர்கட்கு தெரியாது. எனவே நான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வது, மக்களுக்கு சேவை செய்யும் என்னுடய உரிமைக்கு இடையூறு செய்யவேண்டாம் என்பதாகும் என தெரிவித்திருந்தார்.
0 comments :
Post a Comment