Monday, August 3, 2009

சிறுவன் வடிவில் தோன்றி மறைந்த முருகன்.

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் முருகப்பெருமான் ஆலய மகோற்சபம் 22ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தீர்த்தோற்சபம் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி இடம்பெறும் இதற்காக முருகப்பெருமானின் பாதத்தை தரிசித்து அவரின் அருளை பெற்றுக்கொள்வதற்காக நாடுமுழுவதும் உள்ள பல லட்சகணக்கான அடியார்கள் வீதி வழியாகவும் காட்டுப்பாதை வழியாகவும் பாதயாத்திரை சென்று முருகப்பெருமானை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்தாக சென்றுகொணடிருக்கின்றார்கள்.

அவ்வாறே கிழக்குமாகாணத்தில் இருந்து கால்நடையாக செல்லும் அடியார்களும் உகந்தையிலிருந்து யால காட்டுப்பகுதி வழியாக கால்நடையாக செல்வார்கள். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கதிர்காம முருகபெருமான் காட்சிதந்து அருள்புரிவது ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறுகின்றது.

இவ்வருடமும் கிழக்குமாகாணத்தை சேர்ந்த பக்தை ஒருவருக்கு முருகப்பெருமானின் அற்புதம் நிகழ்ந்துள்ளது இது தொடர்பாக தெரியவருவதாவது.

கிழக்குமாகாண காரைதீவு எனும் இடத்தை சேர்ந்த பக்தை ஒருவர் தனது சிறுவயதில் இருந்தே கதிர்காம முருகப்பெருமான் ஆலயத்திற்கு கால்நடையாக சென்று மலையில் உள்ள முருகப்பெருமானுக்கு விளக்கேற்றுவது வழமை. இம்முறைபும் காட்டுவழியாக பாதயாத்திரை சென்ற பக்தைக்கு ஓரு சிறுவன்வடிவில் முருகபெருமான் காட்சிதந்தது மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு முடிச்சையும் கொடுத்து இம்முடிச்சை இங்கு அவிழ்த்து பார்க்காமல் ஆலயத்திற்குள் சென்று பார்க்குமாறு சொல்லிவிட்டு மறைந்துவிட்டாராம்.

பின்பு ஆலயத்திற்குள் சென்று பாhத்தபோது அம்முடிச்சிக்குள் பணம் இருந்ததாகவும் பின்பு அப்பணத்தை ஆலய தேவைகளுக்கு எடுத்ததாகவும் அப்பக்தை கூறுகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com